• Sun. Oct 6th, 2024

சோழவந்தானில் சித்திரை மாத சோமவார பிரதோஷ விழா

ByKalamegam Viswanathan

Apr 18, 2023

சோழவந்தான் வைகை கரையில் அமைந்துள்ள பிரளய நாதர் சுவாமி சிவன் கோவிலில் சித்திரை மாத சோமவார பிரதோஷ விழா மிக சிறப்பாக நடந்தது. திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்
இவ்விழாவை முன்னிட்டு சனீஸ்வரன் லிங்கம் நந்திகேஸ்வரர் சிவனுக்கும் பால், தயிர் உட்பட 12 திரவிய பொருட்களால் அபிஷேகத்தை ரவிச்சந்திர பட்டர், பரசுராம சிவாச்சாரியார், ஐயப்பன் செய்தனர். பின்னர் சுவாமியும் அம்மனும் ரிஷப வாகனத்தில் கோவிலை சுற்றி வலம் வந்தனர். விழாவுக்கு வந்திருந்த பக்தர்கள் அனைவரும் சுவாமியுடன் திருக்கோவிலை வலம்வந்து சிவாய நம சிவாய, சிவாய நமக என்று சொல்லி வந்தனர்.சிறப்பு அர்ச்சனை பூஜைகள் நடைபெற்றது . தீபாராதனை காட்டப்பட்டு பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.பிஜேபி விவசாய அணி மாநிலத் துணைத் தலைவர், எம் வி எம் குழும தலைவர் மணிமுத்தையா,நிர்வாகி வள்ளிமயில், எம் வி எம் கலைவாணி மெட்ரிக் பள்ளி தாளாளர், சோழவந்தான் நகர அரிமா சங்க தலைவர் மருதுபாண்டி உட்பட ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். இதே போல திருவேடகம் ஏழவார் குழலி சமேத ஏடகநாதர் சுவாமி திருக்கோவிலிலும் மற்றும் சோழவந்தான் அதனை சுற்றியுள்ள சிவாலயங்களிலும் சோமவார பிரதோஷ விழா நடைபெற்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *