• Sun. Sep 27th, 2026
WhatsAppImage2026-09-24at2158321
previous arrow
next arrow
Read Now

சோழவந்தான் அருகே வடிவேல் காமெடி பாணியில் சுவரொட்டி

ByKalamegam Viswanathan

Apr 18, 2023

சோழவந்தான் அருகே மேலக்கால் ஊராட்சியில ஓடையை காணோம் என வடிவேல் காமெடி பாணியில் சுவரொட்டி ஒட்டியதால் பரபரப்பு
மதுரை மாவட்டம் வாடிப்பட்டி ஊராட்சி ஒன்றியம் மேலக்கால் ஊராட்சியில் உள்ள ஊராட்சி மன்ற அலுவலகத்திற்கு தெற்கு புறமாக உள்ள ஓடை ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரி ஊராட்சி முழுவதும் கிணற்றைக் காணோம் என வடிவேல் பட வசன பாணியில்ஓடையை காணோம் என்று சுவரொட்டிகள் ஒட்டி உள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

மேலும் இதுகுறித்து ஊராட்சி மன்றத் துணைத் தலைவர் மற்றும் செயலாளர் ஆகியோரிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. மேலும் பொதுமக்கள் செல்லும் வாகனங்களுக்கு இடையூறாகவும், சவ ஊர்வலம் செல்லும் போது மிகுந்த இடையூறாகவும் இருப்பதால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்தில் உள்ளனர் அதனை கருத்தில் கொண்டு உடனடியாக ஓடை ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் மேலும் ஆக்கிரமித்து கட்டிய வீடுகளை அகற்றி பாதையை செப்பனிட்டு தர வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். தொடர்ந்து வாடிப்பட்டி ஒன்றிய ஆணையாளிரிடமும் நேரில் மணு கொடுக்கப்பட்டது..