• Tue. Sep 10th, 2024

கருப்புப் பெட்டியைத் தேடும் ராணுவத்தினர்:

இந்திய முப்படைகளின் தலைமைத் தளபதி விபின் ராவத் சென்ற ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளான நிலையில், மேட்டுப்பாளையம் – குன்னூர் சாலை ராணுவத்தின் வசம் சென்றுள்ளது.

சூலூரிலிருந்து இன்று காலை குன்னூர் வெலிங்டன் ராணுவ தளத்திற்கு இந்திய முப்படைகளின் தளபதி விபின் ராவத் உள்ளிட்ட ராணுவ உயர் அதிகாரிகள் ஹெலிகாப்டரில் பயணித்தனர்.

இந்நிலையில், குன்னூர் அருகே ஹெலிகாப்டர் சென்ற போது விபத்துக்குள்ளானது. இதில் தற்போது வரை 10 பேர் பலியாகியிருக்கிறார்கள்.4 பேர் படுகாயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்கள். மேலும் , விபின் ராவத் மற்றும் அவருடைய மனைவி நிலை குறித்து இன்னும் தகவல் வெளியாகவில்லை.

கருப்புப் பெட்டியைத் தேடும் ராணுவத்தினர்:

ஹெலிகாப்டரின் கருப்புப் பெட்டியின் பதிவுகளை வைத்தே விபத்துக்கான காரணத்தைக் கண்டறிய முடியும் என்பதால் கருப்புப்பெட்டியை தேடும் பணியில் ராணுவத்தினர் ஈடுபட்டுள்ளனர். இதனால் மேட்டுப்பாளையம் – குன்னூர் சாலை ராணுவத்தின் வசம் சென்றுள்ளது. அந்த சாலையில் எல்லா போக்குவரத்தும் நிறுத்தப்பட்டுள்ளது.”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *