• Sat. Sep 23rd, 2023

போதைப்பொருள் பயன்பாடு குறித்து சமூக சிந்தனையாளர் அழகுராஜா பழனிச்சாமி கருத்து…

Byதரணி

Aug 12, 2022

ஆரோக்கியமான சமுதாயம் தேவைப்படும்போது இளைய சமுதாயம் போதையில் தள்ளாடினால் நாட்டின் அஸ்திவாரம் ஆட ஆரம்பித்து விடும், எதிர்காலம் இருண்டு போய்விடும் என்பதைக் குறித்து திராவிட மாடல் ஆட்சியின் முதல்வர் மு. க. ஸ்டாலின் பேசியது மிகவும் பெருமையாக உள்ளது என்று சமூக சிந்தனையாளர் மற்றும் பேராசிரியர் முதுமுனைவர் அழகுராஜா பழனிச்சாமி அறிக்கை வெளியிட்டுள்ளார்.

இன்றைய இளம் தலைமுறையினருக்கு பெரும் அச்சுறுத்தலாக போதைப்பொருள் பெரும் சவாலாக இருக்கின்றது. இது இளம் தலைமுறையினரின் எதிர்காலத்தை திசைமாற்றி அவர்களை தவறான பாதையில் தள்ளி விடுகின்றது. இன்றைய சமுதாயம் எதிர்நோக்கியுள்ள மிகப்பெரிய சவால்களில் ஒன்று போதைப் பொருளுக்கு அடிமையானவர் தமிழகத்தில் ஒருவர் இருந்தாலும் அது ஒட்டுமொத்த தமிழகத்திற்கும் அவமானம் தான். பொழுதுபோக்கிற்காகவும், சிறிது நேரம் கிடைக்கும் அற்ப சந்தோசத்திற்காகவும் பயன்படுத்தப்படும் இந்த போதைப்பொருட்கள் உடல் நலத்திற்கு கேடுவிளைவித்து உயிரிழப்புக்களை ஏற்படுத்துவதோடு, சமூகத்தில் பல சீர்கேடுகளையும் தோற்றுவிக்கின்றன.

இந்நிலையில் போதைப் பொருட்களை தடுத்து நிறுத்துவதும் அவை தொடர்பாக மக்களிடையே மற்றும் தமிழ்நாட்டில் உள்ள மாவட்ட ஆட்சியர்களுக்கு முதல்வர் மு க ஸ்டாலின் மாவட்டங்கள் தூரம் ஒவ்வொரு தாலுகா அளவிலும், ஒன்றிய அளவிலும் மற்றும் கிராமங்களிலும், ஊராட்சி மன்ற தலைவர்கள் ஊராட்சி மன்றம் பிரதிநிதிகளை வைத்து, அரசு அலுவலர்களை வைத்து அனைத்து கிராமங்களிலும் போதை விழிப்புணர்வு ஏற்படுத்துவதும் மிகவும் அவசியமாகும்.

போதைப்பொருள் அறிமுகம்

போதைப்பொருட்களானவை பயன்படுத்தப்படும் போது அவற்றிற்கு அடிமையாகி நாளடைவில் அவை இன்றி வாழமுடியாத நிலையை உருவாக்கும்.இவ்வாறன போதைப்பொருட்களிற்கு உதாரணமாக மதுபான வகைகள், புகையிலை, கஞ்சா, அபின் போன்றவற்றை குறிப்பிடலாம். இவற்றுள் மதுபானம் அனைவராலும் பரவலாக பயன்படுத்தப்படும் ஒன்று.அபின், கஞ்சா போன்ற போதைப்பொருட்கள் பயன்பாட்டிற்கு தடை விதிக்கப்பட்டவையாகும். இவற்றைப் பயன்படுத்துவது மிகமோசமான விளைவுகளை ஏற்படுத்தும்.இன்றைய இளம் சமுதாயம் பரவலாக போதைப்பாவனைக்கு உட்பட்டு வருகின்றது. விளையாட்டாக ஆரம்பிக்கும் இப்பழக்கம், நாளடைவில் உயிரிழப்புக்களை ஏற்படுத்துகின்றன. குறிப்பாக தென் மாவட்டத்தில் ஒரு கிராமத்தில் மட்டும் 20 முதல் 25 வயது எட்டு இளைஞர்கள் உயிரிழந்தது வருத்தமான செய்தி ஆகும். இது கிராமத்தில் உள்ள மக்கள் கூறியது. இளம் தலைமுறையாகக் கருதப்படுகின்ற மாணவர்கள் போதைப்பாவனைக்கு அடிமையாக மாறிவருவது தற்போது பேசுபொருளாக மாறியுள்ளது.

பெற்றோர்கள் தமது பிள்ளைகள் வீட்டிற்கு வெளியே எவ்வாறான செயல்களில் ஈடுபடுகின்றார்கள். யார்யாருடன் நட்புக் கொள்கின்றார்கள் என கண்காணிக்க வேண்டும் மாணவர்களுக்கும் இளைஞர்களுக்கும் மொபைல் போன் ஆண்ட்ராய்டு போன்ற whatsappகளில் மூலம் போதைப் பொருள்கள் ஆர்டர் கொடுக்கப்படுவது அனைத்து செய்திகளும் அறிந்ததே இதனை பெற்றோர்கள் உன்னிப்பாக கவனித்து தங்கள் பிள்ளைகளை நல்ல முறையில் பாதுகாத்து வருங்கால சந்ததிகளை உருவாக்க பாடுபட வேண்டும் இல்லை என்றால் அவர்களை எதிர்காலம் பாழாகிவிடும் இதற்கு பொறுப்பு பெற்றோர்கள் தான். இந்திய நாட்டிற்கும் பாரத பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் ஆட்சியில் தமிழகத்திற்கு பெரும் உதவிசெய்து வருகிறார் அவருடைய உதவி தமிழகத்திற்கு நீண்ட நாளைக்கு தேவை, தமிழகத்திற்கும் வீட்டிற்கும் கேடுவிளைவிக்கும் போதைப்பொருட்களை தடுத்து நிறுத்துவதோடு, அவற்றை முழுதாக ஒழிக்க வேண்டும். தமிழக முதலமைச்சர். மு. க. ஸ்டாலின் அவர்கள் கூறியது போல் அனைவரும் சேர்ந்து பாடுபட்டால் தான் முழுமையாக கஞ்சா போதையை ஒழிக்க முடியும்.

தடைசெய்யப்பட்ட போதைப்பொருட்களை விற்பவர்களுக்கு சிறைத்தண்டனைகளை வழங்குவதோடு, பதினெட்டு வயதிற்கு குறைவானோருக்கு மதுபானம், சிகரட் போன்றனவற்றை விற்பனை செய்வோருக்கு குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டும். இவ்வாறு தமிழக அரசோடு சேர்ந்து மக்களாகிய நாமும் விழிப்புணர்வோடு செயற்பட்டு போதையற்ற இந்தியாவையும் போதையற்ற தமிழக திராவிட மாடல் ஆட்சியாக தமிழகத்தில் மாற்றம் கொண்டு வர கடந்த மூன்று நாளுக்கு முன்பு தமிழக முதல்வர் மாவட்ட ஆட்சித் தலைவர், மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் மற்றும் காவல்துறை உயர் அதிகாரிகளும் சென்னையில் ஆய்வு மேற்கொண்டார்கள்.

அழகுராஜா பழனிச்சாமி

தமிழகத்தை கஞ்சாவின் போதை இல்லாத மாநிலமாக உருவாக்க அனைவரும் பாடுபட வேண்டும் என்று கூறினார். போதைப்பொருள் இருப்பவர்களின் சொத்துக்களை உடனடியாக முடக்க வேண்டும் அவர்கள் கடுமையாக தண்டிக்கப்படும் என்று தமிழகத்திற்கு உத்தரவு தெரிவித்தார் உத்தரவு தமிழக பொது மக்களின் நல்ல வரவேற்பு பெற்றுள்ளது. தமிழக காவல்துறையும் அரசு உயர் அதிகாரிகளும் பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் இளைஞர்களும் இதற்கு உறுதுணையாக இருந்து விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் இவை ஒன்று மட்டுமே தமிழகத்தில் ஆரோக்கியமான சமுதாயத்தை ஏற்படுத்தும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *