• Fri. Mar 29th, 2024

சர்வாதிகாரியாக மாறுவேன் என்று முதலமைச்சர் கூறுவதா- ஆர்.பி.உதயகுமார் பேட்டி

ByA.Tamilselvan

Aug 13, 2022

ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை இல்லாமல் சர்வாதிகாரியாக மாறுவேன் என்று முதலமைச்சர் கூறுவதா
சட்டமன்ற எதிர்க்கட்சி துணை தலைவர் ஆர்.பி.உதயகுமார் பேட்டி
மதுரை கல்லூரி மைதானத்தில் இந்திய நாட்டின் 75 ஆவது சுதந்திர தின விழாவை முன்னிட்டு கிரிக்கெட் போட்டிகளின் துவக்க விழா நடைபெற்றது  கிரிக்கெட் போட்டிகளை தமிழக எதிர்க்கட்சி துணைத் தலைவர் ஆர்.பி.உதயகுமார் துவக்கி வைத்தார் 
கிரிக்கெட் போட்டிகளை துவக்கி வைத்த ஆர்.பி.உதயகுமார் கிரிக்கெட் வீரர்களுக்கு தேசியக்கொடிகளை பரிசாக வழங்கி கௌரவித்தார் பின்னர் கிரிக்கெட் மைதானத்தில் பேட்டிங், பவுலிங் செய்து கிரிக்கெட் விளையாடினார்.


அதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த ஆர்.பி.உதயகுமார் கூறியதாவது
பாரத பிரதமர் வேண்டுகோளை ஏற்று முன்னாள் முதலமைச்சர், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடியார் ஆணைகிணங்க,  நாட்டிற்காக தன்னை அர்ப்பணித்த சுதந்திரப் போராட்ட வீரர்களின் தியாகத்தை இளைய சமுதாயத்திற்கு எடுத்துச் செல்லும் வகையில் இளைய சமுதாயத்திற்கு தேசியக்கொடி வழங்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. மக்களுக்காக திட்டங்களை தவிர, திட்டத்துக்காக மக்கள் அல்ல என்று அம்மாவின் வழியில் எடப்பாடியார் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தினார்.திமுக  நீட் தேர்வை ரத்து செய்வேன் என ஏமாற்றி   வாக்குகளைப் பெற்றனர் ,ஆனால் மசோதாவை மட்டும் நிறைவேற்றி எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
தேசத்தை காப்பாற்ற லட்சுமணன் என்ற ராணுவ வீரர் பயங்கரவாதி தாக்குதால் வீரமரணம் அடைந்துள்ளார், ஒவ்வொரு இளைஞர்களும் ராணுவ வீரர் வழிகாட்டியாக உள்ளார் ,போதை பொருட்களை ஒழிக்க முடியும்.ஸ்டாலின் சர்வாதிகாரியாக நடந்து கொள்வேன் என பேசி இருப்பது அவர் ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை இல்லாமல் இருக்கிறாரோ என்ற அச்சத்தை ஏற்படுத்துகிறது தமிழக எதிர்க்கட்சி  துணை தலைவர் என்ற முறையில் எனக்கு அது கவலை அளிக்கிறது .கள்ளக்குறிச்சி மாணவி ஸ்ரீமதியின்  பிறந்த நாளை முன்னிட்டு நேற்று அவரது பெற்றோர்கள் மாணவியின் சமாதியில்  மரக்கன்றுகள் நட முற்பட்டதற்கு அனுமதி மறுக்கப்பட்டு இருக்கிறது  
திமுக பிரமுகர் அருவாளை காண்பித்துக் கொண்டு மக்களை விரட்டுவது என்பது  அமைதி பூங்காவாக இருந்த தமிழகம் தற்போது அமளிக்காடாக மாறி உள்ளது ,இதனால் சட்ட ஒழுங்கு சீர்கெட்டு தமிழகத்தின் எதிர்காலம் கேள்விக்குறியாகி உள்ளது என்று கூறினார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *