• Mon. Jun 23rd, 2025
WhatsAppImage2025-06-06at0431542
WhatsAppImage2025-06-06at04315413
WhatsAppImage2025-06-06at04315415
WhatsAppImage2025-06-06at04315412
WhatsAppImage2025-06-06at0431543
WhatsAppImage2025-06-06at0431548
WhatsAppImage2025-06-06at0431547
WhatsAppImage2025-06-06at04315410
WhatsAppImage2025-06-06at0431549
WhatsAppImage2025-06-06at04315411
WhatsAppImage2025-06-06at0431545
WhatsAppImage2025-06-06at04315414
WhatsAppImage2025-06-06at0431544
WhatsAppImage2025-06-06at0431546
previous arrow
next arrow

உலக நாயகனுடன் ஒரு படம் கூட நடிக்கவில்லை.. நடிகர் வருத்தம்..

Byகாயத்ரி

Aug 13, 2022

தமிழ் சினிமாவில் 90’ஸ்களில் பிரபலமான வில்லனாக வலம் வந்தவர் மன்சூர் அலிகான். இவருடைய அசாத்தியமான வசன உச்சரிப்பு, மிரட்டும் முகபாவனை போன்றவற்றால் ஏராளமான ரசிகர்களை தன் வசப்படுத்தினார். இவர் ஏராளமான முன்னணி நடிகர்களுடன் இணைந்து பல படங்களில் நடித்துள்ளார். ஆனால் உலக நாயகன் கமல்ஹாசனுடன் இணைந்து மன்சூர் அலிகான் ஒரு திரைப்படத்தில் கூட நடிக்கவில்லை.

இது தனக்கு மிகுந்த வருத்தமாக இருக்கிறது என்று மன்சூர் அலிகான் பல மேடைகளில் கூறியிருக்கிறார். இந்நிலையில் இளம் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தன்னுடைய படத்தில் மன்சூர் அலிகானை கண்டிப்பாக நடிக்க வைப்பேன் என்று கூறியிருக்கிறார். மேலும் விக்ரம் 2 படத்தை இயக்கும் எண்ணம் லோகேஷ் கனகராஜுக்கு இருப்பதால், உலக நாயகனுக்கு வில்லனாக மன்சூர் அலிகான் நடிக்க வைப்பதற்கு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.