• Fri. Apr 26th, 2024

திருடிய பொருளுடன் தூக்கம்: போலீசிடம் சிக்கிய ’கீரிப்புள்ள’..

By

Sep 5, 2021

கன்னியாகுமரியில் திருடிய பொருட்களுடன் தூங்கிய திருடனை போலீசார் கைது செய்தனர்.
கன்னியாகுமரி மாவட்டத்தில், கடந்த சில நாட்களுக்கு முன் ஆசாரிப்பள்ளம் பகுதியில் உள்ள கோயில் ஒன்றில் குத்துவிளக்கு மற்றும் பூஜை பொருட்கள் திருடு போனது. இது குறித்து, போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரனை நடத்தி வந்தனர். இந்நிலையில், அப்பகுதயில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த போது, இரண்டு இருசக்கர வாகனத்தில் வந்த, நான்கு பேர் கொண்ட மர்ம கும்பல் பொருட்களை திருடி செல்வது பதிவாகி இருந்தது.

இதனையடுத்து , ஆசாரிப்பள்ளம் பகுதிகளில் இருக்கும் சிசிடிவியில், கொள்ளையன் சடையால்புதூர் பகுதியில் உள்ள ஒரு வீட்டிற்குள் செல்லும் காட்சி பதிவாகி இருந்தது . இந்நிலையில் வீட்டை சுற்றி வளைத்த தனிப்படை போலீசார் நடத்திய சோதனையில், திருடிய பொருட்களுடன் ஒருவர் கொண்டிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.
பபோலீசார் நடத்திய விசாரணையில் பிடிப்பட்டவர், வெள்ளிச்சந்தை பகுதியை சேர்ந்த அனிஷ்ராஜன் என்றும், இவர் தொழில்பயிற்சி முடித்து பிளம்பராக வேலை பார்த்து வந்ததும் தெரிய வந்தது. கடந்த நான்கு வருடங்களுக்கு முன் திருமணமாகி குழந்தைகள் இல்லாத நிலையில்,2ஆண்டுகளாக நண்பர்களுடன் சேர்ந்து கொள்ளையில் ஈடுபட்டது தெரிய வந்தது.
மேலும், இதுவரையில் 24-க்கு மேற்பட்ட இடத்தில் கொள்ளையடித்ததாக தெரிவித்த அனிஷ்ராஜனிடமிருந்து, 600-கிலோ எடையுள்ள வெண்கல பொருட்கள், தங்க நகைகள், டிவி உள்ளிட்ட பொருட்களை போலீசார் பறிமுதல் செய்ததனர். பின்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர் .இந்நிலையில் தலைமறைவான அவனது கூட்டாளிகள் மூன்று பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *