• Tue. Apr 23rd, 2024

ஆசிரியரின் கல்லறைக்கு அஞ்சலி செலுத்திய மாணவர்கள்: நெகிழ்ச்சியை ஏற்படுத்திய சம்பவம்!

By

Sep 5, 2021

ஆசிரியர் தினத்தையொட்டி கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் தங்களை உயர்ந்த நிலைக்கு ஆளாக காரணமாக இருந்தது மட்டுமல்லாமல் மாணவப் பருவத்தில் தங்களது கிழிந்த சட்டையை கூட தைத்து தந்து இரண்டாம் தாயாக உருவாக்கிய மறைந்த ஆசிரியரின் கல்லறைக்கு முன்னாள் மாணவர்கள் சென்று மாலை அணிவித்து அஞ்சலி செலுத்திய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வடசேரி அருகே உள்ள கலுங்கடி பகுதியை சேர்ந்த மறைந்த ஆசிரியை லீலா பாய் தான் பணிபுரிந்த காலங்களில் மாணவர்களுக்கு ஆசிரியராக மட்டுமல்லாமல் இரண்டாம் தாயாக இருந்து அவர்களுக்கு கல்வி கற்பித்ததோடு கிழிந்த சட்டை தைத்துக் கொடுத்து சொந்தப் பிள்ளைகள் போன்று பார்த்து அவர்கள் நல்ல நிலைக்கு உயர காரணமாக இருந்தார்.

இதனை நன்றியோடு நினைவு கூறும் வகையில் ஒவ்வொரு ஆண்டும், ஆசிரியர் தினத்தை ஒட்டி லீலாபாயிடம் படித்த மாணவ மாணவிகள் அவரது கல்லறைக்கு சென்று மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர். வழக்கமாக அவரிடம் படித்த ஏராளமான மாணவர்கள் அஞ்சலி செலுத்துவது உண்டு .

தற்போது கொரோனா காலகட்டம் என்பதால் மிக குறைந்த அளவில் முன்னாள் மாணவர்கள் ஆசிரியர் தினத்தன்று
மறைந்த ஆசிரியரின் கல்லறைக்கு சென்று மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.இச்சம்பவம் பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தும் விதமாக அமைந்துள்ளது .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *