• Sat. Feb 15th, 2025

குடியரசு தின விழாவை கொண்டாடிய சிவகாசி மைனாரட்டி எஜுகேஷன் டிரஸ்ட்!

Byதரணி

Jan 27, 2025

சிவகாசி மைனாரிட்டி எஜிகேசன் டிரஸ்ட் சார்பாக நமது அரசியலமைப்பு சட்டம் நடைமுறைக்கு வந்ததன் 75-வது ஆண்டு நிறைவு மற்றும் 76 வது குடியரசு தின தேசிய கொடியேற்றும் நிகழ்ச்சி நடை பெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு அறக்கட்டளையின் நிறுவனர் செய்யது ஜாஹிர் உசேன் தலைமை தாங்கினார். அறக்கட்டளையின் செயலாளர் ரஹ்மத்துல்லா மற்றும் பொருளாளர் மாபு பாட்ஷா கௌரவ ஆலோசகர் செய்யது முஸ்தபா சிவகாசி ஷா பாஸ்கான் கோரி பள்ளிவாசல் முன்னாள் தலைவர் காதர் ஷா ஆகியோர் முன்னிலை வகித்தனர். அறக்கட்டளையின் ஒருங்கிணைப்பாளர் முகம்மது இப்ராஹிம் திவான் வரவேற்புரை வழங்கினார். டிரஸ்டின் கௌரவ ஆலோசகர் தாதாமியான் நன்றியுறை வழங்கினார். இந்திய தேசிய லீக் மாநில செயலாளர் செய்யது ஜஹாங்கீர் தேசியக்கொடி ஏற்றினார். மேலும் இந்நிகழ்ச்சிக்கு இந்திய தேசிய லீக் நகர தலைவர் முகம்மது கான், செயலாளர் முத்துவிலாசா, பொருளாளர் முஹம்மதுகாசிம் இப்ராஹிம், சிறுபாண்மைபிரிவு ஆசிப், ஜாபர் விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகிகள் முகம்மது அலி மற்றும் டிரஸ்ட் நிர்வாகிகள், பொது மக்கள் திரளாக கலந்து கொண்டனர்.