ஸ்ரீவில்லிபுத்தூர் நகராட்சி அலுவலகத்தில் 76 ஆவது குடியரசு தினவிழா கொண்டாடப்பட்டது. நகர்மன்ற தலைவர் தங்கம் ரவி, கண்ணன் தேசிய கொடியை ஏற்றி வைத்து தலைவர்கள் சிலைகளுக்கு மாலை அணிவித்து சிறப்புரையாற்றினார். நகராட்சி ஆணையாளர் பிச்சை மணி வரவேற்புரை ஆற்றினார். நகர மன்ற துணைத் தலைவர் செல்வமணி முன்னிலை வகித்து வாழ்த்தி பேசினார். நகராட்சி பொறியாளர் கோமதி சங்கர், சுகாதார அலுவலர் கந்தசாமி, மேலாளர் பொறுப்பு நாகசுப்பிரமணியன் ஆகியோர் முன்னிலை வைத்தனர். நகர் மன்ற உறுப்பினர்கள் வாழ்த்தி பேசினர். விழாவில் சிறப்பாக பணியாற்றிய அனைவரும் பாராட்டப்பட்டனர்.

