• Sun. Aug 16th, 2026
WhatsAppImage2026-08-13at1759153
previous arrow
next arrow
Read Now

விஜய்யின் பீஸ்ட் படத்தில் சிவகார்த்திகேயன்!..

Byமதி

Oct 2, 2021

விஜய் நடிப்பில் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் ‘பீஸ்ட்’. இந்த படத்தில் பூஜா ஹெக்டே, செல்வராகவன், யோகி பாபு உள்ளிட்டோர் நடித்து வருகிறார்கள். விஜய்யின் 65 வது படமான ‘பீஸ்ட்’படத்திற்கு அனிருத் இசையமைகிறார். இந்தப் படத்தின் 6-ஆம் கட்டப் படப்பிடிப்பு தற்போது சென்னையில் நடைபெற்று வருகிறது. நவம்பர் இறுதியில் முழு படப்படிப்பையும் முடித்து அடுத்த ஆண்டு கோடை விடுமுறைக்கு படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளனர் படக்குழுவினர்.

இந்த நிலையில், நடிகர் சிவகார்த்திகேயன் விஜய்க்காக ‘பீஸ்ட்’ படத்தில் பாடல் ஒன்றை எழுதியிருக்கிறார். இதுகுறித்த தகவல்களை சிவகார்த்திகேயன் ஊடகம் ஒன்றிற்கு அளித்தப் பேட்டியில் உறுதி செய்திருக்கிறார். மேலும் படக்குழுவே இதை அறிவிக்கும் என்றும் கூறியிருக்கிறார்.