சோழவந்தானில்1.67 கோடி மதிப்பில் புதிய சார் பதிவாளர் அலுவலக புதிய கட்டிடம் பூமி பூஜை வெங்கடேசன் எம்எல்ஏ பங்கேற்றார்.
மதுரை மாவட்டம் சோழவந்தானில் 1.67 கோடி மதிப்பில் சார்பதிவாளர் அலுவலகம் புதிய கட்டிடம் கட்டுவதற்கான பூமி பூஜை விழா பழைய சார் பதிவாளர் அலுவலக வளாகத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சோழவந்தான் சட்டமன்ற உறுப்பினர் வெங்கடேசன் எம்எல்ஏ கலந்துகொண்டு பணிகளை தொடங்கி வைத்தார். ஒன்றிய செயலாளர் பசும்பொன் மாறன், பேரூராட்சித் தலைவர் எஸ்.எஸ்.கே.ஜெயராமன், பேரூர் செயலாளர் வழக்கறிஞர் சத்திய பிரகாஷ், பொதுக்குழு உறுப்பினர் ஸ்ரீதர் சி. பி. ஆர். சரவணன், பிற்பட்டோர் நலத்துறை உறுப்பினர், மாவட்ட பிரதிநிதி பேட்டை பெரியசாமி, பேரூராட்சி கவுன்சிலர்கள் கொத்தாலம், செந்தில், செல்வராணி, குருசாமி, கௌதம ராஜா, சிவா, முத்துச்செல்வி, சதீஷ் நிர்வாகிகள் முன்னாள் பேரூர் செயலாளர் முனியாண்டி, அவை தலைவர் தீர்த்தம் என்ற ராமன், சங்கங்கோட்டை சந்திரன், ரவி, மாரிமுத்து, கண்ணதாசன், சரவணன், இளைஞரணி வெற்றிச்செல்வன், மாணவர் அணி எஸ். ஆர். சரவணன், வக்கீல் முருகன், ஊத்துக்குளி ராஜா, முள்ளிப்பள்ளம் கேபிள் ராஜா, மன்னாடிமங்கலம் ரேகா வீரபாண்டி, பிரதிநிதி ராமநாதன், நூலகர் ஆறுமுகம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.