• Tue. Dec 10th, 2024

சிந்தனைத் துளிகள்

Byவிஷா

Apr 7, 2022

• போராடு… இவனால் இதை செய்ய முடியாது என்று
சொன்னவர்கள்.. இதை எப்படி செய்தாய் என சொல்லும் வரை..!

• இல்லையே என்று ஒருபோதும் வருந்தாதீர்கள்..
இருந்து இருப்பதை விட.. இல்லாமல் இருப்பதின் வலி குறைவு தான்..!

• அனைவருக்கும் வரலாற்றில் ஓர் தனி பக்கம் உண்டு..
அந்த பக்கத்தை நிரப்புவதும் காலியாக வைத்திருப்பதும்
அவரவர் முயற்சியில் தான் உள்ளது..!

• நிறைய துன்பங்களை சுமந்தாலும் புன்னகைக்க மறந்து விடாதீர்கள்..
ஒரு நாளிலே வாடிவிடும் பூக்கள் கூட அழுவதில்லை..!

• நீந்த முடியாத மீன்களை நதி ஒதுக்கி விடும்..
விமர்சனம் தாண்டி உழைக்காத மனிதனை வெற்றி ஒதுக்கிவிடும்..!