

• ஆசையின் வேட்கையை அடக்கவும் முடியாது, தீர்த்து வைக்கவும் முடியாது.
• மன அமைதியில் அடங்கியதே இன்ப வாழ்வு.
• கிணற்றில் தவறி விழுந்து விட்டது பற்றி வருத்தப்பட வேண்டாம். அந்த வாய்ப்பைப் பயன்படுத்தி நிம்மதியாகக் குளித்து விட்டு வா.
• சின்ன விசயங்களை கண், காது, மூக்கு வைத்து ஒன்றுக்கு ஒன்பதாக்கும் பழக்கத்தை மனிதர்கள் கனவுகளிடம் இருந்துதான் கற்க வேண்டும். ஏனெனில் உணர்வுகளை கனவுகள் மிகைப்படுத்திக் காட்டும்.
• புத்தகம் இல்லாத வீடு – ஆன்மா இல்லாத கூடு
