• Sat. May 25th, 2024

சிந்தனைத் துளிகள்

Byவிஷா

May 7, 2022

• நெருக்கடி நிலையிலும் நிதானமிழக்காமல் அமைதியாக முடிவெடுப்பது உற்சாகமான சூழ் நிலையில் சம நிலை இழக்காமல் இருப்பது யாரையும் திருப்திபடுத்த தனக்கு விருப்பமில்லாத செயல்களில் ஈடுபடாமலிருப்பது இவையே உண்மையான தலைவனின் குணாதிசயங்கள்.

• உங்களுக்கு ஒரு நல்ல மனைவி அமைய வேண்டுமென்றால், ஒருவருக்கு நல்ல மகளாக வாழும் ஒருவரை திருமணம் செய்துகொள்ளுங்கள்.

• மின்மினிப்பூச்சி பறக்கும்போதுதான் பளபளக்கிறது. மனிதன் சுறுசுறுப்போடு இயங்கும்போது தான் பிரகாசிக்கிறான்.

• நீண்ட தூக்கத்தைவிட ஆழ்ந்த தூக்கத்திலேயே அதிக நன்மை உள்ளது.

• திருமணம் செய்து கொள்வதற்கு முன் கண்களை நன்றாகத் திறந்து வை. அதன்பின் பாதிக்கண் மூடியிருக்கட்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *