

பழம்பெரும் பாடகி லதா மங்கேஷ்கரின் உடல்நிலை மீண்டும் மோசமடைந்துள்ளதாகவும், அவர் கவலைக்கிடமாக உள்ளதால், வென்டிலேட்டரில் வைக்கப்பட்டுள்ளதாகவும் ப்ரீச் கேண்டி மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புகழ் பெற்ற பாடகியும், ‘இந்தியாவின் இசைக்குயில் எனப் போற்றப்படுபவருமான லதா மங்கேஷ்கர் கடந்த சில நாட்களுக்கு முன்னர் கொரோனா தொற்று காரணமாக மும்பையில் உள்ள ப்ரீச் கேண்டி மருத்துவமனையில், ஐசியு பிரிவில் அனுமதிக்கப்பட்டார்.இதனையடுத்து, அவரது உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டு குணமடைந்து வருவதாக மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.இந்நிலையில், லதா மங்கேஷ்கரின் உடல்நிலை மீண்டும் மோசமடைந்துள்ளதாகவும், அவர் கவலைக்கிடமாக உள்ளதால் வென்டிலேட்டரில் வைக்கப்பட்டுள்ளதாகவும் மும்பை ப்ரீச் கேண்டி மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும், அவர் இன்னும் ஐசியுவில் இருக்கிறார் எனவும், மருத்துவர்களின் தொடர் கண்காணிப்பில் இருப்பார் என்றும் மருத்துவமனை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு, திரைத்துறையினர் மற்றும் அவரது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
