• Fri. Mar 29th, 2024

தமிழ்நாட்டில் சித்த மருத்துவ பல்கலை-மா.சுப்பிரமணியன்

Byகாயத்ரி

Apr 21, 2022

எந்தெந்த மாவட்டங்களில் செவிலியர் பயிற்சி பள்ளிகள் இல்லையோ அங்கு இல்லாம் அமைப்பதற்கு மெல்லமெல்ல நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.

பேரவையில் கேள்வி நேரத்தின்போது நடைபெற்ற விவாதத்தில் அ.தி.மு.க செந்தில் நாதன் கூறியதாவது சிவகங்கை மருத்துவக் கல்லுாரியில் பி.எஸ்சி., செவிலியர் படிப்பை தொடங்க வேண்டும். இதையடுத்து சிவகங்கை மருத்துவக் கல்லுாரிக்கு கூடுதலாக ‘சி.டி.ஸ்கேன்’ கருவி வேண்டும். முதல்முறை டயாலிசிஸ் செய்ய மதுரை அரசு மருத்துவமனை செல்ல வேண்டிஇருக்கிறது. இதனால் அந்த சிகிச்சையை சிவகங்கை மருத்துவமனையில் அளிக்க மருத்துவர்கள் நியமிக்க வேண்டும். அதன்பின் சிவகங்கை மருத்துவக் கல்லுாரியில் புது மருத்துவ படிப்புகளை தொடங்க வேண்டும்.

அதனை தொடர்ந்து அமைச்சர் சுப்பிரமணியன் பேசியதாவது “மதுரை, ராமநாதபுரம், தேனி, பெரியகுளம் போன்ற இடங்களில் செவிலியர் பயிற்சி பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. இதனை சிவகங்கை மாவட்ட மாணவர்கள் பயன்படுத்திக்கொள்ளலாம். சிவகங்கை மாவட்ட மருத்துவக் கல்லுாரிக்கு பல்வேறு வசதிகள் செய்யப்பட்டு வருகிறது. பல அதிநவீன வசதிகளுடன் கூடிய கருவிகள் இருக்கிறது. இதனிடையில் கூடுதல் கருவிகள் அமைப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளபடும்” என்று கூறினார். பின் தமிழ்நாடு வாழ்வுரிமை கட்சி – வேல்முருகன் பேசியதாவது “கருணாநிதி ஆட்சியில் சென்னை, பாளையங்கோட்டை சித்த மருத்துவக் கல்லுாரியில் இந்திய மருத்துவ முறையில் செவிலியர் பயிற்சி பெற்றவர்களை பணி நியமனம் செய்ய அரசு முன் வருமா? என்று கேள்வி எழுப்பினார்.அதற்கு அமைச்சர் சுப்பிரமணியன் “சித்த மருத்துவப் பல்கலையை தமிழ்நாட்டில் உருவாக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அவ்வாறு சித்த மருத்துவப் பல்கலை வரும்போது அவர்கள் பணி அமர்த்தப்படுவர்” என்று தெரிவித்தார். அதன்பின் திமுக கலைவாணன் “திமுக ஆட்சியில் திருவாரூர் மாவட்டத்தில் செவிலியர் கல்லுாரி அமைக்க அரசாணை வெளியிடப்பட்டது. 10 வருடங்களாக கல்லுாரி தொடங்கப்படவில்லை” என்று கேட்டார். அதற்கு அமைச்சர் சுப்பிரமணியன் “தமிழகத்தில் முன்பே 5 செவிலியர் கல்லுாரிகள், 21 செவிலியர் பயிற்சிப் பள்ளிகள் இருக்கின்றன. ஆகவே எந்தெந்த மாவட்டங்களில் செவிலியர் பயிற்சி பள்ளிகள் இல்லையோ, அங்கெல்லாம் அமைக்க அடுத்தடுத்து நடவடிக்கை மேற்கொள்ளப்படும்” என்று கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *