• Wed. Apr 22nd, 2026
WhatsAppImage2026-04-16at222113
previous arrow
next arrow
Read Now

சந்தானம் நடிக்கும் ”SANTA 20” படத்தின் படப்பிடிப்பு..,

Byஜெ.துரை

Mar 7, 2026

வீனஸ் இன்ஃபோடெய்ன்மென்ட்- K 7 ஸ்டுடியோஸ் தயாரிப்பில் சந்தானம் நடிப்பில் உருவாகும் ‘ SANTA 20 ‘ காலத்தை மாற்றி அமைத்து துப்பு துலக்கும் திரில்லர் திரைப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கி முழு வீச்சில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

மிகவும் எதிர்பார்க்கப்பட்ட சந்தானத்தின் ‘SANTA 20’ படத்தின் படப்பிடிப்பு சென்னையின் முக்கியமான பகுதிகளில் நடைபெற்று கொண்டிருக்கிறது. இயக்குநர் சுதாமன் கிருஷ்ணா இயக்கத்தில் உருவாகும் இந்த திரைப்படத்தை வீனஸ் இன்ஃபோடெய்ன் மென்ட் கே. ஜே. கணேஷ் மற்றும் K 7 ஸ்டுடியோஸ் விஜய் கே செல்லையா ஆகியோர் இணைந்து தயாரிக்கின்றனர்.

இந்த படம் மர்மம் -சஸ்பென்ஸ் மற்றும் நகைச்சுவை ஆகியவற்றின் அற்புதமான கலவையைக் கொண்ட புதிய கால பயணத்தை அடிப்படையிலான துப்பறியும் கதையாகும்.

‘SANTA 20 ‘திரைப்படம் ஒரு துப்பு துலக்கும் நிபுணரை மையப்படுத்தி தயாராகிறது.

அவர் ஒரு குற்றத்தை கண்டறிய தொடங்குகிறார். இது அவரை எதிர்பாராத வகையில் சாகசமும் , சிலிர்ப்பூட்டும் பயணத்திலும் ஆழ்த்துகிறது.

இந்தப் படத்தில் சந்தானத்துடன் கோபிகா ரமேஷ் கதாநாயகியாக நடிக்கிறார். இவர்களுடன் ரெடின் கிங்ஸ்லி, ஜார்ஜ் மரியன், பிரதீப் ஆண்டனி, ஜென்சன் திவாகர், டிஎஸ்ஆர் மற்றும் ஃபௌஸி உள்ளிட்ட திறமையான கலைஞர்கள் நடிக்கிறார்கள்.

வலிமையான தொழில்நுட்ப கலைஞர்களின் பங்களிப்புடன் SANTA 20 காட்சி ரீதியாகவும் வளமான மற்றும் ஈர்க்கக்கூடிய சினிமா அனுபவத்தை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.