• Wed. Apr 23rd, 2025

சவரனுக்கு 320 ரூபாய் குறைந்தது- இன்றைய தங்கம் விலை நிலவரம்

ByP.Kavitha Kumar

Mar 21, 2025

தங்கம் விலை இன்று சவரனுக்கு 320 ரூபாய் குறைந்து ஒரு சவரன் ரூ.66,160-க்கும் விற்பனையானது.

சர்வதேச பொருளாதார நிலவரத்துக்கு ஏற்ப இந்தியாவில் தங்கத்தின் விலை அவ்வப்போது உயர்ந்தும், குறைந்தும் வருகிறது. ஏற்ற, இறக்கத்துடன் காணப்பட்டு வந்த தங்கம் விலை கடந்த அக்டோபர் 30-ம் தேதி ஒரு சவரன் ரூ.59 ஆயிரத்தை கடந்து புதிய உச்சத்தை தொட்டது. அதனைத் தொடர்ந்து ஏற்ற இறக்கத்துடன் இருந்த தங்கம், பின்னர் படிப்படியாக உயர்ந்து ரூ. 64 ஆயிரத்தை தொட்டது.

இந்த நிலையில் தங்கம் விலை கடந்த 14-ம் தேதி வரை தொடர்ந்து ஏறுமுகத்திலேயே இருந்து, கடந்த 14-ந்தேதி இதுவரை இல்லாத உச்சமாக ரூ.66 ஆயிரத்து 400 என்ற நிலையை அடைந்தது. அன்றைய தினம் ஒரே நாளில் மட்டும் சவரனுக்கு ரூ.1,440 அதிகரித்திருந்தது. அதனைத் தொடர்ந்து விலை குறைந்து வந்த நிலையில் கடந்த 3 நாட்களாக தங்கம் விலை மீண்டும் அதிகரித்தது.

இதனைத் தொடர்ந்து நேற்று தங்கம் விலை ஒரு சவரன் ரூ.66,480-க்கு விற்பனையானது. இந்நிலையில், இன்று தங்கம் விலை குறைந்துள்ளது. கிராமுக்கு 40 ரூபாய் குறைந்து ஒரு கிராம் ரூ.8,270-க்கும் சவரனுக்கு 320 ரூபாய் குறைந்து ஒரு சவரன் ரூ.66,160-க்கும் விற்பனையானது.