முன்னாள் முதல்வரும் தமிழக எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி காரின் மீது செருப்பு வீசப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா நினைவிடத்தில் அஞ்சலி செலுத்திவிட்டு எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் திரும்பி காரில் திரும்பிச் சென்று கொண்டிருக்கும்போது டிடிவி தினகரன் தூண்டுதலின் பெயரில் அமமுகவினர் எடப்பாடி காரின் மீது செருப்பு மற்றும் கற்களை வீசியதாகவும், தாக்குதல் நடத்துவதற்காக இரும்பு தடி கம்பு கட்டை ஆகிய ஆயுதங்களை அமமுகவினர் எடுத்து வந்ததாகவும் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் ஓ பன்னீர்செல்வம் ஆகியோருக்கு அமமுகவினர் கொலை மிரட்டல் எச்சரிக்கை கொடுத்துள்ளதாகவும் காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இப்புகாரின் அடிப்படையில், அமமுகவைச் சேர்ந்த 50 பேர் மீது 4 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
இது டிடிவி தினகரன் தரப்பிற்கு மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஏற்கனவே இது குறித்து கருத்து தெரிவித்திருந்த அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், ஜனநாயக ரீதியில் எதிரிகளை எதிர் கொள்வோமே தவிர ஒருபோதும் வன்முறையை கையில் எடுக்க மாட்டோம்.
வன்முறை மீது எங்களுக்கு எப்போதும் நம்பிக்கை இருந்ததில்லை. வன்முறையில் ஈடுபடுவது எடப்பாடி பழனிச்சாமிக்கு வேண்டுமானால் கைவந்த கலையாக இருக்கலாம், எங்களுக்கு அல்ல என அவர் கூறியிருந்தார். இந்நிலையில் அமமுக தொண்டர்கள் 50 பேர் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.