தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே கோத்தலூத்து கிராமத்தில் வேளாண் துறை, வனத்துறை மற்றும் தோட்டக்கலைத்துறை சார்பில் உலக மண் தின விழா கொண்டாடப்பட்டது ,விழாவில் ஆண்டிபட்டி எம்எல்ஏ மகாராஜன் கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்கி சிறப்புரையாற்றினார் .

பசுமை போர்வை திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு நெல்லி, நாவல் ,தேக்கு, புளி மரக்கன்றுகள் வழங்கப்பட்டது. மேலும் 24 விவசாயிகளுக்கு கூட்டு பண்ணை திட்டத்தின் கீழ் ரூபாய் 45 ஆயிரம் மானியத்திற்கான ஆணைகள் வழங்கப்பட்டது. விழாவில் கண்ணன் என்ற விவசாயிக்கு ரூபாய் 47 ஆயிரம் மானியத்தில் பவர் வீடர் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் வேளாண் துறை ,வனத் துறை, தோட்டக்கலைத் துறை சார்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டனர். ஒன்றிய கவுன்சிலர் இராஜாராம் ,ஆண்டிபட்டி முன்னாள் சேர்மன் ராமசாமி ,வேளாண் துணை இயக்குனர் முத்துலட்சுமி ,சரவணன் ,உதவி இயக்குனர் ராஜசேகர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.