• Sun. Aug 23rd, 2026
WhatsAppImage2026-08-20at214238
previous arrow
next arrow
Read Now

மதுரையில் சாலை விதிகளை மீறும் ஷேர் ஆட்டோக்கள்..,

ByKalamegam Viswanathan

Mar 21, 2026

மதுரை மாவட்டம், மதுரை நகரில், விதிகளை மீறி இயக்கப்படும் ஷேர் ஆட்டோக்கள்.
இதை கண்டு கொள்ளாத, போக்குவரத்து போலீஸார், வட்டார போக்குவரத்து அலுவலர்கள். மதுரை மாவட்டத்தில் பல ஆயிரம் ஷேர் ஆட்டோக்கள் விதிகளை மீறி அதிகப்படியான பயணிகளை ஏற்றி ஆபத்தான பயணத்தை தொடர்கின்றன.

மதுரை அண்ணாநகர், அண்ணா பஸ் நிலையம், கருப்பாயூரணி, சிம்மக்கல்,புதூர், மதுரை நீதிமன்றம், ஒத்தக்கடை, சோழவந்தான்,சமய நல்லூர், பரவை, வாடிப்பட்டி, திருமங்கலம், செக்காணூரணி, நாகமலை புதுக்கோட்டை, கே.கே. நகர், மேலூர் உள்ளிட்ட பல பகுதிகளில் , விதிகளை மீறி தொடர்ந்து ஷேர் ஆட்டோக்கள் இயக்கப்பட்டு வருகிறது.

ஷேர் ஆட்டோக்கள் பல பஸ் நிறுத்தம் அருகே நிறுத்தி, பயணிகள் அரசுப் சிட்டி பஸ்களில் பயணிக்க முடியாதபடி நிலை ஏற்பட்டு வருகிறது.
மதுரை கருப்பாயூரணி, தெப்பக்குளம், சிம்மக்கல் பகுதிகளில், போக்குவரத்து போலீஸார், இரு சக்கர வாகணங்கள், மினி லாரிகளை மடக்கி, அடிக்கடி அபராதம் வருகின்றனராம்.

இரு சக்கர வாகனங்களை தொடர்ந்து மடக்கி அபராதம் விதிக்கும் போலீஸார், பெர்மிட் இன்றியும், விதிகளை மீறும் ஷேர் ஆட்டோக்களை கட்டுப்படுத்த போக்குவரத்து காவல் துணை ஆணையர், வட்டார போக்குவரத்து ஆய்வாளர்கள் ஆர்வம் காட்ட வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மதுரை நகரில், பல ஷேர் ஆட்டோக்கள், தொடர்ந்து அரசு பஸ்கள் போல செயல்படுவதாக இப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
மதுரை மாவட்ட ஆட்சித் தலைவர், தலையீட்டு, அரசு பெர்மிட் இன்றியும், விதிகளை மீறி செயல்படும் ஷேர் ஆட்டோக்கள் மீது துரித நடவடிக்கை எடுக்க வேண்டும்.