

ஆரியன்கான் போதைப்பொருள் விவகாரத்தில் ஷாருக்கான் பெண் மேலாளருக்கு சம்மன் அனுப்பப்பட்டு உள்ளது.
போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் கடந்த மாதம் சொகுசு கப்பல் போதைப்பொருள் வழக்கில் நடிகர் ஷாருக்கானின் மகன் ஆர்யன் கானை கைது, பல்வேறு முறை ஜாமின் கோரி இறுதியாக சமீபத்தில் கிடைத்து. இதில் போதை பொருள் வழக்கில் இருந்து ஆர்யன் கானை விடுவிக்க ரூ.25 கோடி பேரம் நடந்ததாக குற்றச்சாட்டு எழுந்து உள்ளது.
இதில் ஷாருக்கானின் மேலாளர் பூஜா தத்லானியிடம் பேரம் பேசியவர்கள் தொழில் அதிபர் சாம் டிசோசா மற்றும் போதை பொருள் தடுப்பு பிரிவின் சாட்சி கிரன் கோசவி எனவும் கூறப்படுகிறது.
இது தொடர்பாக ஷாருக்கானின் மேலாளர் பூஜா தத்லானிக்கு மும்பை போலீசார் சம்மன் அனுப்பியுள்ளனர். போதைப்பொருள் கடத்தல் வழக்கில் மிரட்டி பணம் பறிக்கும் விசாரணையில் பூஜாவுக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளதாக மும்பை போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
