• Thu. Apr 25th, 2024

மதுரை சேது பொறியியல் கல்லூரியில் சேது பசுமை சங்கமம் விழா

Byp Kumar

Mar 18, 2023

மதுரை அருகே உள்ள சேது பொரியர் கல்லூரியில் சேது பொறியியல் கல்லூரியுடன் தி ரைஸ் நிறுவனம் மற்றும் நண்பன் பவுண்டேஷன் சேர்ந்து சேது பசுமை சங்கமம் என்ற நிகழ்வு நடத்தப்பட்டது.
வேளாண் விருதுகள் ,மரம் நடு விழா, மூலிகை தோட்டம் திறப்பு விழா, சிறுதானிய இயற்கை உணவு திருவிழா, நாட்டுப்புற கலை நிகழ்ச்சிகள் ,பாரம்பரிய தமிழக விளையாட்டுப் போட்டிகள், தமிழர் கலாச்சார கண்காட்சி ,சுற்றுச்சூழல் விளக்க கண்காட்சி போன்ற நிகழ்வுகள் இடம் பெற்றன. இந்த நிகழ்விற்கு கல்லூரி நிறுவனர் மற்றும் தலைவர் முகமதுஜலில் அவர்கள் தலைமை தாங்கினார் கல்லூரி நிர்வாக அதிகாரிகள் சீனிமுகைதீன், சீனிமுகமதுஅலியார், நிலாஃபர்பாத்திமா,நாசியாபாத்திமா முன்னிலை வகுத்தனர். சிறப்பு விருந்தினர்களாக சென்னை எழுமின் அமைப்பு நிறுவனர் அருள் தந்தை ஜெகத்கஸ்பர்ராஜ் கலந்து கொண்டார். கல்லூரி முதல்வர் முனைவர் செந்தில்குமார் ,சென்னை வழக்கறிஞர் கனிமொழி மதி, இயற்கை வேளாண்மையாளர் பாமயன் ,எழுமின் இயக்குனர் சுரேஷ் ,மனோகரன் ,பாலகுரு பதஞ்சலி சரவணன் ,டேனியல் வில்சன் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினார்கள். இந்த நிகழ்வில் தமிழ் பாரம்பரிய உணவு மற்றும் திணை வகைகளை ஊக்குவித்தல் போட்டிகள்மற்றும் தமிழக பாரம்பரிய விளையாட்டான சிலம்பம் ,பல்லாங்குழி ,தாயம், சடுகுடு போட்டிகள், கயிறு இழுத்தல் ,பானை உடைத்தல் போன்ற போட்டிகள் மாணவ மாணவிகளுக்கு நடத்தப்பட்டது. விவசாயம் மற்றும் விவசாயம் சார்ந்த தொழில் முனைவோர்களான சிவக்குமார் அவர்களுக்கு வேளாண் புதுமை விஞ்ஞானி விருது ,சேதுபதி அவர்களுக்கு பாரம்பரிய நெல் விவசாய விருது ,பாண்டி அவர்களுக்கு உழவர் ஊக்குவிப்பாளர் விருது ,மணிராஜ் அவர்களுக்கு இயற்கை விவசாயி விருது ,பாலமுருகன் அவர்களுக்கு பாரம்பரிய ஆடு வளர்ப்பு விருது வழங்கப்பட்டது. விழா ஏற்பாட்டை முதல்வர் செந்தில்குமார் தலைமையில் துணை முதல்வர் சிவக்குமார் பேராசிரியர்கள் ஜெயசாந்தி,லக்ஷ்மணராஜ், முத்துசாமி, மீனாட்சிசுந்தரம், கண்ணதாசன் மற்றும் பலர் செய்திருந்தனர். விழா சிறப்பு நிகழ்ச்சியாக காரியாபட்டி ராமர் அவர்களின் பறையாட்டமும் கிராமிய இசையமைப்பாளர் சுரேஷ் அவர்களின் இசை நிகழ்ச்சியும் நடத்தப்பட்டது.


மதுரை அருகே உள்ள சேது பொரியர் கல்லூரியில் சேது பொறியியல் கல்லூரியுடன் தி ரைஸ் நிறுவனம் மற்றும் நண்பன் பவுண்டேஷன் சேர்ந்து சேது பசுமை சங்கமம் என்ற நிகழ்வு நடத்தப்பட்டது. இந்த நிகழ்வில் வேளாண் விருதுகள் ,மரம் நடு விழா, மூலிகை தோட்டம் திறப்பு விழா, சிறுதானிய இயற்கை உணவு திருவிழா, நாட்டுப்புற கலை நிகழ்ச்சிகள் ,பாரம்பரிய தமிழக விளையாட்டுப் போட்டிகள், தமிழர் கலாச்சார கண்காட்சி ,சுற்றுச்சூழல் விளக்க கண்காட்சி போன்ற நிகழ்வுகள் இடம் பெற்றன. இந்த நிகழ்விற்கு கல்லூரி நிறுவனர் மற்றும் தலைவர் முகமதுஜலில் அவர்கள் தலைமை தாங்கினார் கல்லூரி நிர்வாக அதிகாரிகள் சீனிமுகைதீன், சீனிமுகமதுஅலியார், நிலாஃபர்பாத்திமா,நாசியாபாத்திமா முன்னிலை வகுத்தனர். சிறப்பு விருந்தினர்களாக சென்னை எழுமின் அமைப்பு நிறுவனர் அருள் தந்தை ஜெகத்கஸ்பர்ராஜ் கலந்து கொண்டார். கல்லூரி முதல்வர் முனைவர் செந்தில்குமார் ,சென்னை வழக்கறிஞர் கனிமொழி மதி, இயற்கை வேளாண்மையாளர் பாமயன் ,எழுமின் இயக்குனர் சுரேஷ் ,மனோகரன் ,பாலகுரு பதஞ்சலி சரவணன் ,டேனியல் வில்சன் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினார்கள். இந்த நிகழ்வில் தமிழ் பாரம்பரிய உணவு மற்றும் திணை வகைகளை ஊக்குவித்தல் போட்டிகள்மற்றும் தமிழக பாரம்பரிய விளையாட்டான சிலம்பம் ,பல்லாங்குழி ,தாயம், சடுகுடு போட்டிகள், கயிறு இழுத்தல் ,பானை உடைத்தல் போன்ற போட்டிகள் மாணவ மாணவிகளுக்கு நடத்தப்பட்டது. விவசாயம் மற்றும் விவசாயம் சார்ந்த தொழில் முனைவோர்களான சிவக்குமார் அவர்களுக்கு வேளாண் புதுமை விஞ்ஞானி விருது ,சேதுபதி அவர்களுக்கு பாரம்பரிய நெல் விவசாய விருது ,பாண்டி அவர்களுக்கு உழவர் ஊக்குவிப்பாளர் விருது ,மணிராஜ் அவர்களுக்கு இயற்கை விவசாயி விருது ,பாலமுருகன் அவர்களுக்கு பாரம்பரிய ஆடு வளர்ப்பு விருது வழங்கப்பட்டது. விழா ஏற்பாட்டை முதல்வர் செந்தில்குமார் தலைமையில் துணை முதல்வர் சிவக்குமார் பேராசிரியர்கள் ஜெயசாந்தி,லக்ஷ்மணராஜ், முத்துசாமி, மீனாட்சிசுந்தரம், கண்ணதாசன் மற்றும் பலர் செய்திருந்தனர். விழா சிறப்பு நிகழ்ச்சியாக காரியாபட்டி ராமர் அவர்களின் பறையாட்டமும் கிராமிய இசையமைப்பாளர் சுரேஷ் அவர்களின் இசை நிகழ்ச்சியும் நடத்தப்பட்டது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *