• Sun. Sep 8th, 2024

கூட்டணி குறித்து அ.தி.மு.க.தான் முடிவு செய்யும்..,அண்ணாமலைக்கு ஓ.எஸ்.மணியன் பதிலடி..!

Byவிஷா

Mar 18, 2023

தமிழ்நாட்டில் கூட்டணி குறித்து அதிமுக தான் முடிவு செய்யும் என்று பா.ஜ.க தலைவர் அண்ணாமலைக்கு முன்னாள் அமைச்சர் ஓ.எஸ்.மணியன் பதிலடி கொடுத்துள்ளார்.
தமிழக பா.ஜ.க. மாநில நிர்வாகிகள் மற்றும் அணி தலைவர்கள் கூட்டம் சென்னை அமைந்தகரையில் உள்ள திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பேசிய அண்ணாமலை அதிமுக கூட்டணி குறித்து பேசிய கருத்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கூட்டத்தில் அண்ணாமலை பேசியதாவது: தமிழகத்தில் நாம் தனியாக இருந்தால் மட்டுமே கட்சியை வளர்க்க முடியும். கூட்டணி நிலைப்பாட்டை எடுத்தால், தலைவர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு சாதாரண தொண்டனாக இருப்பேன். வருகிற தேர்தலில் அ.தி. மு.க. உடன் கூட்டணி என்று முடிவு எடுத்தால், எனது பதவியை ராஜினாமா செய்துவிடுவேன். சாதாரண தொண்டனாகவே கட்சி பணிகளை செய்வேன். பிரதமர் நரேந்திர மோடியை சந்திப்பதற்கு நேரம் கேட்டு இருக்கிறேன். இவ்வாறு கூறினார். ஏற்கனவே அதிமுக-பாஜக கூட்டணியில் மோதல் போக்கு ஏற்பட்டுள்ள நிலையில், அண்ணாமலையின் இந்த பேச்சு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில், அண்ணாமலையின் பேச்சு குறித்து அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் ஓ.எஸ்.மணியன் செய்தியாளர்களிடம் பேசிய போது..,
அ.தி.மு.க. தான் தமிழ்நாட்டில் கூட்டணியை முடிவு செய்யும், கூட்டணிக்கு தலைமை ஏற்கும். யாருடன் கூட்டணி, யாருக்கு எத்தனை சீட்டு கொடுக்க வேண்டும் என்பதை முடிவு செய்யும் கட்சி அ.தி.மு.க. தான் என்று தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *