• Mon. Nov 17th, 2025
WhatsApp Image 2025-11-13 at 17.55.58
previous arrow
next arrow
Read Now

தோவாளை வட்டாட்சியர் அலுவலகத்தில் லஞ்சம் கேட்டதாக பரபரப்பு புகார்

செண்பகராமன்புதூர் கண்ணன்புதூரை சேர்ந்த பாசுஆனந்த் மவுரியா என்பவர் கடந்த 10-11-2021 அன்று தனக்கு மாவட்ட தொழில் முனைவோர் மையத்தின் மூலம் கடன் பெற விண்ணப்பிக்க ஒரு நபர் சான்று கேட்டு விண்ணப்பிக்க தோவாளை வட்டாட்சியர் அலுவலகம் சென்றுள்ளதாகவும், அப்போது தோவாளை வட்டாட்சியர் அலுவலக தலைமையிடத்து துணை வட்டாட்சியர் அன்னபாய் என்பவர் ஒரு நபர் சான்று தற்போது வழங்கப்படுவதில்லை.

ஒரு நபர் சான்று வேண்டுமென்றால் 5000 ரூபாய் வேண்டும் என்று லஞ்சம் கேட்டதாகவும், தன்னிடம் லஞ்சம் கேட்டதோடு கொடுக்க மறுத்ததால் தரக்குறைவாக நடத்தி அலுவலகத்தை விட்டு வெளியே அனுப்பியதாகவும், இன்று குமரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியரை சந்தித்து தோவாளை வட்டம் தலைமையிடத்து துணை வட்டாட்சியர் அன்னபாய் மீது புகார் கொடுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.