நல்லம நாயுடு, கடந்த 1997 முதல் 2015ஆம் ஆண்டு வரை, மறைந்த முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கில் முதன்மை விசாரணை அதிகாரியாக பணியாற்றியிருந்தார். மேலும் ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில் சிபிஐ விசாரணை அதிகாரியாகவும் செயலாற்றியவர். சென்னை பெரவள்ளூரில் வசித்துவந்த அவர், 1961ஆம் ஆண்டு காவல் உதவி ஆய்வாளராக பணியில் சேர்ந்து பின்னர் லஞ்ச ஒழிப்புத்துறையில் காவல் கண்காணிப்பாளராக பணியாற்றியவர். இரண்டு முறை குடியரசுத் தலைவரிடம் விருது பெற்றுள்ளார். மேலும் லஞ்ச ஒழிப்புத்துறையில் திறம்பட செயல்பட்டதற்காக ஆளுநரிடமும் விருது வாங்கியுள்ளார்.

83 வயதான நல்லம நாயுடு, இன்று காலை வயது மூப்பின் காரணமாக காலமானார். அவரின் உடலுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று அஞ்சலி செலுத்தியுள்ளார்.
இதுகுறித்து தனது டிவிட்டர் பக்கத்தில் இரங்களை தெரிவத்துள்ளர். அதில், “ஊழல் ஒழிப்பைத் தனது நெஞ்சில் சுமந்து – நேர்மையோடும் துணிச்சலோடும் எவ்வித அச்சுறுத்துலுக்கும் அஞ்சாது நியாயத்தை நிலைநாட்டிய காவல் கண்காணிப்பாளர் நல்லம்ம நாயுடுவின் மறைவு பேரிழப்பாகும். அன்னாருக்கு நேரில் இறுதி மரியாதை செலுத்தி அவர் குடும்பத்துக்கு எனது ஆறுதலைத் தெரிவித்தேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.