• Sat. May 2nd, 2026
WhatsAppImage2026-04-23at013527
previous arrow
next arrow
Read Now

போதை இல்லாத வாழ்வை அமைத்துக் கொள்ளும் நல்வழிகுறும் படம்..,

தமிழகத்தின் தென்கோடி மாவட்டம் கன்னியாகுமரி. ஒரு சர்வதேச சுற்றுலா பகுதி. தினம், தினம் மொழி, மாநிலம், கலாச்சாரம் என்ற பல்வேறு நிலை கொண்ட மக்கள் வரும் பகுதியில். காவல்துறை பாதுகாப்பு கண்காணிப்பு என்பதை கடந்து. பல்வேறு வகையான போதைப்பொருட்கள் குமரி மாவட்டத்திற்குள் கடத்தப்படுவதை தடுப்போதோடு.

இன்றைய இளைஞர்கள் நாளைய தலைவர்கள் என்ற உணர்வோடு. கல்வியில் ஒரு குறிக்கோளோடு, இலட்சியத்தை நோக்கிய விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில்.

குமரி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் டாக்டர் ஸ்டாலின் முயற்சியில், ஆலோசனையில் உருவாக்க பட்ட குறும் படம் போதையின் பாதையில் செல்லாது, புத்தகத்தின் பாதையில் பயணித்து சமூகத்தில் ஒரு அடையாள மனிதனாக இன்றைய இளைஞ்சர்களை உருவாக்க வழி காட்டும் குறும் படம் போதைக்கு இளைய சமூகம் ஆட்படக்கூடாது என்ற நல்ல ஆலோசனை குறும் படத்தை. குமரி காவல்துறை வெளியிட்டுள்ளது.