• Fri. Nov 13th, 2026

மேல்நிலை நீர் தேக்க தொட்டியில் மர்ம நபர் மலம் கழித்ததால் பரபரப்பு..,

ByM.JEEVANANTHAM

Nov 13, 2026

மயிலாடுதுறை மாவட்டம், நீடூர் அருகே வில்லியநல்லூர் ஊராட்சிக்கு உட்பட்ட, பன்னீர்வெளி கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்தில் தாழ்த்தப்பட்ட மக்கள் 200 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.

இந்நிலையில் காளியம்மன் கோவில் அருகே கிராமத்திற்கு தண்ணீர் வழங்குவதற்காக முப்பதாயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேட்ட தொட்டி அமைந்துள்ளது.

நீர்த்தேக்க தொட்டியின் மேல் புறம் மர்ம நபர் மலம் கழித்து சென்றுள்ளார். இது குறித்து கிராம மக்களுக்கு தெரியவந்த நிலையில், பொதுமக்கள் குடிநீர் உபயோகப்படுத்தவில்லை. தொடர்ந்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கிராம பஞ்சாயத்து சார்பில் தண்ணீர் முழுவதும் வெளியேற்றப்பட்டு வருகிறது.

இந்த தண்ணீரை நம்பி மட்டுமே 200 குடும்பத்தைச் சார்ந்த 350 நபர்கள் உள்ள நிலையில், மேல் நீர்த்தேக்க தொட்டி கட்டப்பட்டு சுமார் 15 ஆண்டுகள் ஆன நிலையில், படிகள் உடைந்து உள்ளே இறங்கி சுத்தப்படுத்த முடியாத நிலையில், படிகள் இல்லாத காரணத்தால், சுத்தப்படுத்த முடியாத நிலை உள்ளது. உடனடியாக தண்ணீரை சுத்தப்படுத்தி குடிநீர் வழங்குவதுடன், சம்பந்தப்பட்ட நபர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.