• Tue. Sep 1st, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

விஜய்யை கூட்டணிக்கு அழைத்ததற்கு காரணம் என்ன தெரியுமா?- செல்வப்பெருந்தகை பேட்டி

ByP.Kavitha Kumar

Jan 23, 2025

இந்தியா கூட்டணிக்கு நடிகர் விஜய்யை அழைத்தற்கான காரணத்தை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை காரணம் கூறியுள்ளார்.

கோவை விமான நிலையத்தில் அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், ஈரோடு கிழக்கு தொகுதியில் இந்தியா கூட்டணி சார்பில் போட்டியிடும் திமுக வேட்பாளரை ஆதரித்து காங்கிரஸ் கட்சியின் முன்னணி தலைவர்கள் அனைவரும் பிரசாரம் செய்ய உள்ளோம்.

தமிழக மக்கள் இந்தியா கூட்டணிக்கு வாக்களிக்க தயாராக உள்ளனர். ஈரோடு கிழக்கு தொகுதியில் திமுக வேட்பாளர் பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவார். இந்தியா கூட்டணி சிறப்பாக செயல்பட்டு வருகிறது.

இந்த மண்ணை பாதுகாக்க கூடிய தலைவர்களாக ராகுல்காந்தியும், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும் உள்ளனர். காங்கிரஸ் கட்சியினர் மகிழ்ச்சியோடு திமுகவினருடன் இணைந்து ஈரோடு கிழக்கு தொகுதியில் தேர்தல் பணியாற்றி வருகிறார்கள். நடிகர் விஜய்யின் கட்சி கொள்கை, கோட்பாடு, சமூக நீதி பேசுவது என அனைத்தும் இந்தியா கூட்டணியுடன் ஒத்துபோவதால் அவரை இந்தியா கூட்டணிக்கு அழைத்தோம் என்றார்.