மகளிர் சுய உதவிக் குழு கடன்களை தள்ளுபடி செய்ய துறை ரீதியான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அது, விரைவில் தள்ளுபடி செய்யப்படும் என அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் தெரிவித்தார்.
கடலூர் மாவட்டத்தில் கூட்டுறவுத்துறை சார்பில் நடந்த நிகழ்ச்சியில் தமிழக வேளாண்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் கலந்துகொண்டார். அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அமைச்சர், “மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் பெய்த கனமழையால் பாதிக்கப்பட்ட விளைநிலங்கள் குறித்து கணக்கெடுப்பு பணி நடைபெற்று வருகிறது.
மகளிர் சுய உதவிக் குழு கடன்களை தள்ளுபடி செய்ய துறை ரீதியான ஆய்வு நடந்து வருகிறது. அதையும் விரைவில் தள்ளுபடி செய்ய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நடவடிக்கை எடுத்து வருகிறார். கடலூர் மாவட்டத்தில் உள்ள மகளிர் சுய உதவிக் குழுவினருக்கு 75 கோடி ரூபாய் வரை கடன் தள்ளுபடி செய்ய தயார் நிலையில் உள்ளது. இது பற்றிய அறிவிப்பு விரைவில் வரும்” என்று அமைச்சர் உறுதிபட கூறினார்.