• Fri. Mar 29th, 2024

புரட்சிகர இளைஞர் முன்னணி சார்பாக ஆர்ப்பாட்டம்

பெரும்பான்மையான பழங்குடியின, தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்களின் நலன்களுக்கு எதிராக பொருளாதார அளவுகோல் என்ற பெயரில் சமூக ரீதியான இட ஒதுக்கீட்டு கொள்கையை சிதைக்கக் கூடாது.உயர் ஜாதியினருக்கு 10% இட ஒதுக்கீடு தரும் 103 வது அரசியல் அமைப்புச் சட்டத் திருத்தத்தை திரும்ப பெற வேண்டும்.ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி ஈரோடு சூரம்பட்டி நால்ரோட்டில் புரட்சிகர இளைஞர் முன்னணி சார்பாக எழுச்சிமிகு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு புரட்சிகர இளைஞர் முன்னணியை சேர்ந்த மாநகர ஒருங்கிணைப்பாளர் தோழர்.செயப்பிரகாசம் தலைமை தாங்கினார்.மேலும் ம.தி.மு.க மேற்கு மாவட்ட செயலாளர் மா.கந்தசாமி, சி.பி.ஐ மாவட்டச் செயலாளர் எஸ்.டி.பிரபாகரன், தி‌.வி.க மாநில அமைப்புச் செயலாளர் ப.இரத்தினசாமி,தமிழக வாழ்வுரிமைக் கட்சி மாநகர மாவட்ட அமைப்பாளர் ஜெ.கோபு, தமிழ்ப்புலிகள் கட்சி மாவட்டச் செயலாளர் சிந்தனைச் செல்வன், இஸ்லாமிய ஜனநாயக பேரவை மாவட்ட அமைப்பாளர் ஏ.ஜாஃபர் அலி, ஆதித்தமிழர் தொழிலாளர் பேரவை மாநில செயலாளர் இரா.வீரகோபால், தற்சார்பு விவசாயிகள் சங்கத் தலைவர் கி.வே.பொன்னையன், த.மு.மு.க மாவட்டத் தலைவர் சித்திக், நீரோடை அமைப்பின் தலைவர் நிலவன், மனிதநேய மக்கள் கட்சி மாவட்டச் செயலாளர் ப.மீரான், எஸ்.டி.பி.ஐ கட்சியின் மாவட்டத் தலைவர் முகமது லுக்மானுல் ஹக்கீம், அம்பேத்கர் பெரியார் படிப்பு வட்ட ஒருங்கிணைப்பாளர் ஈவேரா.சௌந்தர், புரட்சிகர இளைஞர் முன்னணியை சேர்ந்த தோழர்.மாணிக்கம் மற்றும் பு.வி.வி.தொ.மு செல்வராசு ஆகியோர் பாஜக அரசை கண்டித்து கண்டன உரையாற்றினர்.நிறைவாக புரட்சிகர இளைஞர் முன்னணியை சேர்ந்த தோழர்.கைலாசம் நன்றியுரை ஆற்றினார்.இந்த ஆர்ப்பாட்டத்தில் இடையிடையே சமூக நீதியை பாதுகாக்க, 10% இட ஒதுக்கீடை இரத்து செய்ய வலியுறுத்தியும், பாஜக வை கண்டித்தும் கண்டன முழக்கங்கள் எழுப்பப்பட்டன.இந்த ஆர்ப்பாட்டத்தில் 130 பேர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *