• Wed. May 13th, 2026
WhatsAppImage2026-05-08at053925
previous arrow
next arrow
Read Now

717 மதுக்கடைகளை மூட உத்தரவிட்ட தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்த வி.சி.கவினர்..,

Byமுகமதி

May 13, 2026

717 மதுக்கடைகளை மூட உத்தரவிட்ட தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் நன்றி தெரிவித்து தீர்மானம். மேலும் சில கடைகளை அடைக்கவும் அடையாளப்படுத்தி இருக்கிறார்கள்.

தமிழ்நாடு அரசு அறிவித்துள்ள 717 மதுக்கடைகளை மூட உத்தரவிட்ட உள்ளதைத் தொடர்ந்து புதுக்கோட்டை மாவட்டம் குன்னாண்டார் கோவில் ஒன்றிய விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் எம்மாவூர் நந்தன் நன்றி தெரிவித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார் அந்த அறிக்கையில் அவர் தெரிவித்துள்ளதாவது

தமிழ்நாட்டில் 717 மதுபானக் கடைகளை மூடுவதற்கு உத்தரவிட்டிருக்கின்ற மாண்புமிகு முதல்வர் ச. ஜோசப் விஜய் அவர்களின் அறிவிப்பை குன்றாண்டார்கோவில் ஒன்றிய விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வரவேற்கிறது.

அதேவேளையில் சில கோரிக்கைகளையும் முன் வைக்கிறோம்

1.) கீரனூர் நகரத்தில், அரசினர் பெண்கள் மேல்நிலை பள்ளியிலிருந்து 200 மீட்டர் தொலைவிலும், மாணவிகளும் பொதுமக்களும் பேருந்து நிறுத்தமாக பயன்படுத்தும் லெட்சுமி தியேட்டர் பேருந்து நிறுத்தத்திற்கு எதிரே உள்ள மதுபான கடையை மூட வேண்டும்.

2.) குன்றாண்டார்கோவில் கிராமத்தில், ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி யிலிருந்து 250 மீட்டர் தொலைவிலும், குன்றாண்டார்கோவில் வட்டார வளர்ச்சி அலுவலகத்திற்கு எதிரே இருக்கும் மதுபானக் கடையை மூட வேண்டும்

3.) ஒடுகம்பட்டி அருகே உள்ள குமரப்பட்டி விலக்கு பேருந்து நிறுத்தத்திற்கு அருகில் இருக்கும் மதுபானக் கடை தொடர்ச்சியாக மாணவர்களுக்கும், பொதுமக்களுக்கும் இடையூறாக இருப்பதால், அந்த மதுபான கடையை மூட வேண்டும்.

4.) கீரனூர் நகரத்தில் பேருந்து நிலையத்திற்கு மிக அருகமையிலும், யூனியன் வங்கிக்கு அருகில் இருக்கும் திருச்சி சாலையில் உள்ள மதுபானக் கடைகளை மூட வேண்டும்.

5.) கீரனூர் நகரத்தில் பள்ளி மாணவர்கள் தங்கிப் பயிலும் சமூகநீதி மாணவர் விடுதிக்கு அருகாமையிலும், கால்நடை மருத்துவமனைக்கு எதிரே உள்ள மதுபானக்கடையை மூட அரசுக்கு கோரிக்கையாக முன் வைக்கிறோம்.

மேலும் கீரனூர் காந்தி நகர் அருகே இருக்கும் தனியார் மதுபானக் கடையையும் நிரந்தரமாக மூடுவதற்கு உத்தரவிட வேண்டும்

இவை அனைத்துமே குன்றாண்டார்கோவில் ஒன்றிய பொதுமக்களால் பல்வேறு முறை அரசுக்கு வைத்த கோரிக்கைகளில் மிக முக்கியமானது. ஆகவே இவை அனைத்துயுமே தமிழ்நாடு அரசும் மாவட்ட நிர்வாகமும் மேற்கானும் கோரிக்கைகளை உறுதியாக நடைமுறைக்கு கொண்டு வரவேண்டும். அதை விடுத்து சம்மந்தமே இல்லாத கடைகளை கணக்கு காட்டி எடுப்பீர்களேயானால் இந்தக் கடைகளை விடுதலைச் சிறுத்தைகளே முன்னின்று இழுத்து மூடுவோம் என எச்சரிக்கையுடன் தெரிவித்துக் கொள்கிறோம். இவ்வாறு அந்த அறிக்கையில் தெம்மாவூர் நந்தன் தெரிவித்துள்ளார்