• Thu. Apr 25th, 2024

தேனி நகரில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்

Byvignesh.P

Jul 1, 2022

இன்று முதல் பிளாஸ்டிக் பொருட்களுக்கான தடை விடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தேனி நகர் பகுதியில் கடைகளில் பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு அபராதம் விதிக்கப்பட்டது.
தேனி நகரில் உள்ள கடைகளில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் கேரி பை தட்டு கப் உள்ளிட்ட பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் தேனி அல்லிநகரம் நகராட்சி ஆணையாளர் வீர முத்துக்குமார் உத்தரவின்படி, சுகாதார அலுவலர் அறிவுச் செல்வம் தலைமையில் தேனி பெரியகுளம் சாலையில் கடைகள் மற்றும் தேனி பழைய பேருந்து நிலையம் அருகே நகரில் உள்ள பல்வேறு கடைகளில் சுகாதார அலுவலர் தலைமையில் நடத்தப்பட்ட சோதனையில், 200 கிலோ எடையுள்ள தமிழக அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் கேரி பை, தட்டு, கப், டம்ளர் உள்ளிட்ட பொருட்கள் கைப்பற்றப் பட்டது இதனைத் தொடர்ந்து தடை செய்ய பொருட்கள் விற்பனை செய்த கடை உரிமையாளர்களுக்கு ரூ.15000 அபராதம் விதிக்கப்பட்டது. இந்த சோதனையில் சுகாதார ஆய்வாளர்கள் ரவிச்சந்திரன் சரவணன் சுல்தான் பால்பாண்டி கோபாலகிருஷ்ணன் மற்றும் நகராட்சி பணியாளர்கள் உடன் இருந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *