இந்திய கிரிக்கெட் வீரர் முகமது ஷமியை ட்ரோல் செய்த ரசிகர்களை சேவாக் வன்மையாக கண்டித்துள்ளனார்.

நேற்று நடைபெற்ற டி20 உலக கோப்பை போட்டியில் இந்திய அணி பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் 10 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியுள்ளது. இதில் இந்திய வீரர் முகமது ஷமி 3.5 ஓவர்கள் வீசி 43 ரன்களை விட்டுக் கொடுத்திருந்தார். அதனால் ரசிகர்கள் ஷமியை மனம்போன போக்கில் ட்ரோல் செய்துள்ளனர்.
இந்தநிலையில், ஷமிக்கு ஆதரவாக குரல் எழுப்பியுள்ளார் முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் வீரேந்திர சேவாக். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “முகமது ஷமி மீது தொடுக்கப்பட்டுள்ள தாக்குதலை கண்டு அதிர்ச்சியடைகிறேன். இந்த நேரத்தில் நாம் அவருடன் நிற்க வேண்டும். அவர் ஒரு சாம்பியன். இந்தியாவுக்காக சர்வதேச கிரிக்கெட்டில் இந்திய அணியின் சீருடையை அணிந்து விளையாடிய வீரர். இந்தியாவை தங்கள் மனதில் வைத்துக் கொண்டு விளையாடுயடிவர், இவ்வாறு அவரை கடுமையாக சாடி இருப்பது வேதனைக்கு உரியது” என சேவாக் தெரிவித்துள்ளார்.