தமிழ்நாடு எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் நேற்று தஞ்சாவூரில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய் தமிழ்நாடு எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கீழ்த்தரமாக விமர்சித்து பேசினார் எனக் கூறி தமிழ்நாடு முழுவதும் இன்று தமிழக வெற்றி கழகத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது.

மேலும் சென்னையில் தமிழ்நாடு முதலமைச்சர் கீழ்த்தரமாக பேசிய எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலினை இன்று காவல்துறையினர் கைது செய்தனர். உதயநிதி ஸ்டாலின் கவிதை கண்டித்து தமிழ்நாடு முழுவதும் திமுகவினர் பல்வேறு இடங்களில் மறியல் போராட்டம் நடத்தி வந்த நிலையில் புதுக்கோட்டையில் முன்னாள் மாநிலங்களவை எம்பி எம் எம் அப்துல்லா சட்டமன்ற உறுப்பினர் மருத்துவர் முத்துராஜா மாநகர பொறுப்பாளர் ராஜேஷ் உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் நூற்றுக்கும் மேற்பட்டோர் வடக்கு ராஜ வீதியில் உள்ள திமுக அலுவலகத்தில் ஒன்றுகூடி ஊர்வலமாக சென்று பழனியப்பா முக்கத்தில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்திய பொழுது மறியல் போராட்டத்தை கைவிடாமல் தொடர்ந்து மறியல் போராட்டத்தில் திமுகவினர் ஈடுபட்டதால் காவல்துறையினர் அவர்களை வலுக்கட்டாயமாக கைது செய்ய முற்பட்டனர். இதனால் காவல்துறையினருக்கும் திமுகவினருக்கும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. பின்னர் ஒரு வழியாக போராட்டத்தில் ஈடுபட்டவர்களை காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தி கைது செய்து தனியார் திருமண மண்டபத்திற்கு அழைத்துச் சென்றனர் இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிப்பும் ஏற்பட்டது.





