மதுரை மாவட்டம், கள்ளிக்குடி தாலுகா, வி.டிமணிநகரம் என்ற பகுதியில், கார் மீது பஸ் மோதிய விபத்தில் பள்ளித்தாளார் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை மாவட்டம் கள்ளிகுடி தாலுகா விருதுநகர் மாவட்ட எல்லை அருகே வி ..டி. மணி நகரம் உள்ளது. இதை உருவாக்கி அதே பகுதியில் மெட்ரிகுலேஷன் பள்ளி ஒன்றை தங்கராஜ் வயது 58 பள்ளித்தாளாளராகவும் இருந்து வந்தார். இந்த நிலையில் நேற்று இரவு தங்கராஜ் அவரது மனைவி வெங்கடேஸ்வரியுடன் விருதுநகர் சென்று விட்டு இரவு 8:20 மணியளவில் மணி நகரம் அருகே உள்ள தனது வீட்டுக்கு காரை டிரைவர் அருண்குமார் ஒட்டி வந்துள்ளார்.

மதுரை விருதுநகர் சாலையில் மணிநகருக்கு டிரைவர் காரை திருப்ப முயன்ற போது மதுரையிலிருந்து நெல்லை சென்று கொண்டு இருந்த அரசு பேருந்து கார் மீது மோதியது. இந்த விபத்தில் பள்ளித் தாளாளர் தங்கராஜ் சம்பவ இடத்திலேயே உயிர் இழந்தார் காரின் பின் பகுதியில் அமர்ந்திருந்த வெங்கடேஸ்வரி வயது 55 டிரைவர் அருண்குமார் பஸ்ஸில் பயணம் செய்த கல்லூரி மாணவி ஒருவர் ஆகியோருக்கு காயம் ஏற்பட்டது. அவர்களை மீட்ட போலீசார் விருதுநகர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். விபத்து காரணமாக மதுரை விருதுநகர் நான்கு வழிச்சாலையில் சுமார் 3 கிலோ மீட்டருக்கு மேல் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. விபத்தில் சிக்கிய வாகனங்களை போலீசார் அப்புறப்படுத்தி போக்குவரத்தை சீர் செய்தனர்