• Thu. May 7th, 2026
WhatsAppImage2026-05-05at001329
previous arrow
next arrow
Read Now

வி.கே.சசிகலா சார்பில் நலத்திட்ட உதவிகள்

ByKalamegam Viswanathan

Mar 3, 2025

உசிலம்பட்டி அருகே வி.கே.சசிகலா சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 77 வது பிறந்தநாளை முன்னிட்டு, மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் வி.கே சசிகலா ஜெயலலிதாவின் திருவுருவப்படத்திற்கு மலர்தூவி மரியாதை செய்து, தொடர்ந்து பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கிய நிலையில், அதனைத் தொடர்ந்து உசிலம்பட்டி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட எருமார்பட்டி ஊராட்சி அம்முமுத்துப்பட்டி கிராமத்தில் உள்ள ஏழை எளிய மக்களுக்கு சசிகலா சார்பில், நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. அம்மு முத்துப்பட்டி கிராமத்தை சேர்ந்த பாண்டியம்மாள், சரோஜா, முனியம்மாள், செல்வி மற்றும் பார்வையற்ற மாற்றுத்திறனாளியான ஜெயா ஆகியோருக்கு விவசாய பயிர்களுக்கு மருந்து தெளிக்கும் இயந்திரம் வழங்கப்பட்டது. சசிகலா சார்பில் பொன்னுத்தாய் ராஜேஷ் கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

உதவிகளைப் பெற்றுக்கொண்ட பொதுமக்கள் கூறுகையில்..,

எங்களைப் போன்ற ஏழை, எளிய மக்களின் வாழ்வாதாரம் சிறப்படைய ஜெயலலிதா அம்மாவுக்கு பின்பு, உதவி செய்து வரும் சசிகலா அவர்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். வருகின்ற 2026 சட்டமன்றத் தேர்தலில் தமிழகத்தில் அம்மாவின் ஆட்சி மலர்ந்திட சின்னம்மா அதிமுகவிற்கு தலைமை ஏற்க வர வேண்டும். அவருக்கு தான் எங்களின் ஆதரவு என்றும், சின்னம்மாவுக்கு ஆதரவாக இருப்போம் அவருக்காக எங்களைப் போன்ற ஏழை, எளிய மக்களிடம் சென்று வாக்குகள் சேகரித்து அவருக்கு வெற்றியை தேடி தருவோம். இவ்வாறு கூறினர்.