திருவில்லிபுத்தூரில் உள்ள திரு.வி.க. மேல்நிலைப்பள்ளியில் 11-ம் வகுப்பு படித்து வந்த இரண்டு மாணவர்களை பாலியல் தொந்தரவு செய்ததாக தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஸ்ரீவில்லிபுத்தூர் திரு.வி.க தொடக்க பள்ளியில் தலைமை ஆசிரியராக வேலை பார்ப்பவர் ராஜபாளையத்தை சேர்ந்த ராஜேஷ் (வயது 45). இவர் அங்கு வளாகத்தில் உள்ள மேல்நிலைப் பள்ளியில் படிக்கும் 11ஆம் வகுப்பு மாணவர்கள் தனது நண்பர்களுடன் விளையாடிக்கொண்டிருந்த போது, 25.12.24-ம் தேதி மாணவர்களுக்கு கேக் கொடுத்துள்ளார். கேக் கொடுத்ததற்கு நன்றி சொல்ல சிறுவர்கள்
சென்றதாகவும், ராஜேஷ் பாதிக்கப்பட்ட இரண்டு சிறுவர்களையும் தனித்தனியே வரவழைத்து பாலியில் தொந்தரவு செய்ததாகவும் கூறப்படுகிறது. இதனை பாதிக்கப்பட்ட ஒரு சிறுவன் தன் தாய் அவர்களிடம் சொன்னதாகவும், அதற்கு சிறுவனின் தாய் ஆசிரியையிடம் சொல்லவில்லை என கேட்டதற்கு உடற்கல்வி டீச்சரிடமும், மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியையிடம் எழுதிக் கொடுத்தாகவும் கூறியுள்ளார். இதனைத் தொடர்ந்து நடந்த சம்பவத்திற்கு நடவடிக்கை எடுக்க பாதிக்கப்பட்ட சிறுவனின் தாய் காவல் நிலையம் ஆஜராகி கொடுத்த புகாரின் பேரில் ஸ்ரீவில்லிபுத்தூர் காவல்துறை கண்காணிப்பாளர் ராஜா உத்தரவின் பேரில் ஸ்ரீவில்லிபுத்தூர் அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் மலையரசி தலைமையில் சார்பு ஆய்வாளர் பாக்கியமேரி மற்றும் போலீசார் வழக்கு பதிவு செய்து தலைமை ஆசிரியர் ராஜேஷ்யை போக்சோ சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்தனர்.