• Mon. Jan 20th, 2025

ஆண்டாள் கோயிலில் எண்ணெய் காப்பு உற்ஸவம்

ByT. Vinoth Narayanan

Jan 7, 2025

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில், இன்று முதல் மார்கழி எண்ணெய் காப்பு உற்ஸவம் துவங்குகிறது. இதனை முன்னிட்டு நேற்று இரவு 8:00 மணிக்கு ஆண்டாள் மூலஸ்தானத்தில் இருந்து புறப்பட்டு மாடவீதி வழியாக பெரிய பெருமாள் சன்னதிக்கு வந்தடைந்தார்.

அங்கு ஏகாந்த திருமஞ்சனம், கைத்தல சேவை, மூலஸ்தானம் சேர்தல் திருவாராதனம், திருகாப்பு நீக்கல், அரையர் வியாக்கியானம், பஞ்சாங்கம் வாசித்தல், பொதுஜன சேவை நடந்தது. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். பின்னர் இன்று அதிகாலை ஆண்டாள் புறப்பாடு, பெரி யாழ்வார் மங்களாசாசனமாகி மூலஸ்தானம் சேர் தல் நடக்கிறது.

இன்று (ஜன.7) முதல் ஜனவரி 14 வரை மார்கழி எண்ணெய் காப்பு உற்ஸவம் துவங்குகிறது. இதற்காக தினமும் காலை 9:00 மணிக்கு மேல் ஆண்டாள் மாட வீதிகள் வழியாக மண்டபங்கள் எழுந்தருளி, திருமுக்குளம் எண்ணெய் காப்பு மண்டபத்திற்கு வந்தடைகிறார் .அங்கு மதியம் 3:00 மணிக்குமேல் எண்ணெய் காப்பு சேவை நடக்கிறது.

சொர்க்கவாசல் திறப்பு ஜனவரி 10 காலை 7:05 மணிக்கு சொர்க்கவாசல் திறப்பு விழா நடக்கிறது.