• Fri. Jan 24th, 2025

தொடங்கியாச்சு ஸ்கூல்… மாணவர்களுக்கு சர்ப்ரைஸ்!!!

BySeenu

Jun 10, 2024

தமிழகத்தில் கோடை விடுமுறைக்குப் பின் வழக்கமாக ஜூன் 1 ல் பள்ளிகள் திறக்கப்படுவது வழக்கம். ஆனால் இந்தாண்டு ஜூன் 4 ம் தேதி நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியானதால் பள்ளிகள் திறப்பு தள்ளிப் போனது.

மேலும், தமிழகத்தின் வடக்கு மாவட்டங்களில் வெயிலின் தாக்கம் அதிகரித்து இருந்ததாலும், ஜூன் 10 ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என பள்ளிக் கல்வித் துறை அறிவித்து இருந்தது.

தமிழகம் முழுவதும் அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் பள்ளிகள் என 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பள்ளிகளில் லட்சக் கணக்கான மாணவர்கள் படிக்கின்றனர். அவர்களுக்கு கோடை விடுமுறைக்குப் பின்னர் இன்று பள்ளிகள் திறக்கப்பட்டன.

கோவையில் பல்வேறு பள்ளிகளிலும், மாணவர்களை வரவேற்க ஆசிரியர்கள் கலை நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்து இருந்தனர். நீண்ட இடைவெளிக்குப் பின் நண்பர்களை சந்திக்கப் போகும் குஷியின் மாணவர்கள் ஆர்வத்துடன் பள்ளிகளுக்குச் சென்றனர்.

திருச்சி சாலை புனித பிரான்சிஸ் பள்ளியில் மாணவிகள் வரவேற்க சக மாணவிகள் பூக்கள் போல உடை அணிந்து, இனிப்புகளை வழங்கி உற்சாகப்படுத்தினர்.

சில பள்ளிகளில் ஆசிரியர்கள் மேள தாளம் வாசித்தும், பாடல் பாடியும் மாணவர்களை வரவேற்றனர். இத்தகைய சிவப்பு கம்பள வரவேற்பால் மாணவர்கள் குஷி அடைந்து உள்ளனர்.