• Tue. Dec 10th, 2024

மாணவி ஸ்ரீமதி பிறந்தநாளுக்கு அஞ்சலி செலுத்திய பள்ளிக்கல்வித்துறை அமைச்சர்…

Byகாயத்ரி

Aug 12, 2022

கள்ளக்குறிச்சி கனியாமூரில் உள்ள தனியார் பள்ளியில் படித்து வந்த மாணவி ஸ்ரீமதி கடந்த மாதம் 13ம் தேதியன்று மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் தமிழகத்தையே உலுக்கி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்நிலையில் இன்று மாணவி ஸ்ரீமதியின் பிறந்தநாள் என்பதால் மாணவி ஸ்ரீமதியின் இல்லத்திற்குச் சென்ற பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ், அவரது பெற்றோர்க்கு ஆறுதல் கூறி ஸ்ரீமதி படத்திற்கு அஞ்சலி செலுத்தினார். மேலும், மாணவி ஸ்ரீமதி மரணத்திற்குக் காரணமானவர்கள் யாராக இருந்தாலும் தண்டிக்கப்படுவார்கள் அதுதான் மாணவிக்கு நாம் செய்யும் அஞ்சலியாக இருக்கும் என தனது ட்விட்டரில் அவர் பதிவிட்டுள்ளார்.