உக்ரைனின் 10 நகரங்களில் ரஷியா போர் தொடுத்துள்ளதால் பதற்றம் ஏற்பட்டுள்ளது. பல நகரங்களில் ஏவுகணைகளை வீசி ரஷிய படைகள் தொடர்ந்து தாக்கி வருகின்றன.
குறிப்பாக சக்திவாய்ந்த ஆயுதங்களால் ராணுவ தளவாடங்களை ரஷிய படைகள் தாக்கி வருவதாக உக்ரைன் தெரிவித்துள்ளது.இந்த நிலையில், உக்ரைன் மீது போர் தொடுத்த ரஷியாவை உலக நாடுகள் தடுத்து நிறுத்த வேண்டும் என்று
உக்ரைன் வெளியுறவுத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.மேலும், தங்கள் நாட்டை ரஷ்ய தாக்குதலில் இருந்து காப்பாற்ற வேண்டும் என்றும் ரஷ்யா மீது பொருளாதாத்து, தூதரக ரீதியில் கடும் நெருக்கடி கொடுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
அத்துடன், ஐநா பாதுகாப்பு கவுன்சிலுக்கு அமைச்சர் விடுத்துள்ள கோரிக்கையில், ‘ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் நிரந்தர உறுப்பினராக உள்ள ஒரு நாடு இப்படி விதிகளை மீறி செயல்பட்டால், மற்ற நாடுகளும் இதனை பின்பற்ற நேரிடும். ஐநாவில் உறுப்பு நாடாக உள்ள அனைவரும் உக்ரைனை பாதுகாக்க உதவ வேண்டும்’ என்று குறிப்பிட்டுள்ளார். இதனிடையே உக்ரைன் மீதான ரஷிய போரை தடுத்து நிறுத்த பிரதமர் மோடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உக்ரைன் தூதரகம் வேண்டுகோள் விடுத்துள்ளது. ரஷியா -உக்ரைன் அதிபர்களிடம் பிரதமர் மோடி பேச இந்தியாவில் உள்ள உக்ரைன் தூதரகம் கோரிக்கை வைத்துள்ளது. நாட்டின் மீதான போர் குறித்து பேசிய, உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி, ‘ ராணுவம் தனது நடவடிக்கைகளை செய்து வருகிறது. மக்கள் யாரும் பதட்டமடைய வேண்டாம்; அனைவரும் பாதுகாப்பாக இருங்கள்,’ என அவர் நாட்டு மக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
மேலும் இந்தியா ரஷ்யா –உக்ரைன் விவகாரத்தில் நடுநிலையோடு இருக்கும் என வெளியுறவுத் துறை இணையமைச்சர் கைவிரித்துள்ளார்.