உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுக்கும் எதிரொலியால் தங்கம் விலை வரலாறு காணாத வகையில் உயர்ந்துள்ளது இல்லத்தரசிகளை அதிர்ச்சியடைய செய்துள்ளது.
சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1,240 உயர்ந்துள்ளது. ஆபரணத் தங்கம் ஒரு கிராம் ரூ.4,874 க்கும், சவரன் ரூ.38,992-க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் சில்லறை வர்க்கத்தில் ஒரு கிராம் வெள்ளி ரூ.71.40-க்கு விற்பனையாகி வருகிறது. தங்கத்தின் விலை இன்று மாலை நிலவரப்படி சவரனுக்கு 1,240 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.38,992-க்கு விற்பனையாகிறது. ஆபரணத் தங்கம் ஒரு கிராம் ரூ.4,874 விற்பனையாகி வருகிறது. நேற்று ஒரு கிராம் தங்கத்தின் விலை 4,719 க்கு விற்பனையானது. இன்று ஒரே நாளில் கிராமுக்கு 155 ரூபாய் அதிகமானது.ஒரு கிலோ வெள்ளியின் விலை நேற்று மாலை 68,700 ரூபாயாக இருந்த நிலையில், இன்று காலையில் வெள்ளியின் விலை கிலோவுக்கு 2,700 ரூபாய் உயர்ந்து ரூ.71,400-க்கு விற்பனை செய்யப்படுகின்றன. ஒரு கிராம் வெள்ளி ரூ.71.40-க்கு விற்பனை செய்யப்படுகிறது.