• Thu. Aug 27th, 2026
WhatsAppImage2026-08-20at214238
previous arrow
next arrow
Read Now

ஓ.பி.எஸ் உடன் சசிகலா தூதர் சந்திப்பு..,

ByA.Tamilselvan

Aug 31, 2022

தனது சொந்த ஊரான பெரியகுளத்தில் தங்கியுள்ள ஓபிஎஸ் உடன் சசிகலாவின் தூதர் சந்திப்பு நடந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
அ.தி.மு.க.வை கைப்பற்ற எடப்பாடி பழனிசாமி தரப்பினரும், ஓ.பன்னீர்செல்வம் தரப்பினரும் அடுத்தடுத்த நடவடிக்கைகளில் தீவிரமாகி வருகிறார்கள்.அ.தி.மு.க. பொதுக்குழு தொடர்பான வழக்கில் சென்னை ஐகோர்ட்டு விரைவில் தீர்ப்பை வெளியிட உள்ளது. இதற்கிடையே சசிகலாவுடனும், அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரனுடனும் இணைந்து செயல்பட ஓ.பன்னீர்செல்வம் முடிவு செய்து இருக்கிறார்.தற்போது ஓ.பன்னீர்செல்வம் தனது சொந்த ஊரான பெரிய குளத்துக்கு சென்று தங்கி உள்ளார்.
இந்நிலையில் நேற்று ஓ.பன்னீர்செல்வத்தை சசிகலா அனுப்பிய தூதர் ஒருவர் சந்தித்து பேசினார். சசிகலாவின் ஆதரவாளரும், மகளிர் அணியின் முக்கிய பிரமுகருமான அந்த பெண் ஓ.பன்னீர்செல்வத்துடன் சசிகலாவின் வியூகங்கள் குறித்து தெரிவித்ததாக கூறப்படுகிறது. சசிகலாவை ஓ.பன்னீர்செல்வம் விரைவில் சந்திப்பார் என்று தெரிகிறது.