
ஸ்ரீவில்லிபுத்தூர் மக்கள் சேவை மையத்தின் சார்பாக, சர்க்கரைக் குளம் தெப்பம் அருகே மரக்கன்றுகள் நடப்பட்டது. இந்நிகழ்ச்சியில் மக்கள் சேவை மைய செயல் தலைவர் பாலகிருஷ்ணன் மரக்கன்றுகளை நட்டினார். உடன் தலைவர் திருமூர்த்தி, செயலாளர் ரவீந்திரநாத் ராஜா, நிர்வாகிகள் பாண்டியராஜன் உட்பட பலர் கலந்து கொண்டனர் இயற்கை ஆர்வலர்கள், மரக்கன்று பராமரிப்பாளர்கள் மாரியப்பன், காளிராஜ் ஆகியோர்கள் உடன் இருந்தனர். மக்கள் சேவை மையத்தின் சார்பாக மரக்கன்று நடுதல், இயற்கை ஆர்வலர்களை ஊக்குவித்தல், மாற்றுத்திறனாளிகளுக்கான உதவிகள் செய்தல், விபத்து காலங்களில் அவசர உதவி செய்தல், சுகாதாரத்தை பேணிக்காத்தல், போன்ற பல்வேறு பணிகள் செய்து வருவது குறிப்பிடத்தக்கது.
