• Wed. Jul 9th, 2025
WhatsAppImage2025-06-06at0431542
WhatsAppImage2025-06-06at04315413
WhatsAppImage2025-06-06at04315415
WhatsAppImage2025-06-06at04315412
WhatsAppImage2025-06-06at0431543
WhatsAppImage2025-06-06at0431548
WhatsAppImage2025-06-06at0431547
WhatsAppImage2025-06-06at04315410
WhatsAppImage2025-06-06at0431549
WhatsAppImage2025-06-06at04315411
WhatsAppImage2025-06-06at0431545
WhatsAppImage2025-06-06at04315414
WhatsAppImage2025-06-06at0431544
WhatsAppImage2025-06-06at0431546
previous arrow
next arrow

சோழவந்தானில் அருள்மிகு பிரளய நாத சிவாலயத்தில் சனிமஹா பிரதோஷ விழா

ByKalamegam Viswanathan

Feb 19, 2023

சோழவந்தானில் அருள்மிகு பிரளய நாத சிவாலயத்தில் சிவராத்திரியுடன் கூடிய சனிமஹா பிரதோஷ விழா திரளான பக்தர்கள் பங்கேற்பு
மதுரை மாவட்டம்சோழவந்தான் வைகை கரையில் அமைந்துள்ள பிரளய நாதர் சுவாமி சிவன் கோவில் பிரசித்தி பெற்றது. விசாக நட்சத்திரத்திற்குரிய கோவில் ஆகும். குரு சனி ராகு இணைந்து அருள் பாலிக்கின்றனர். இங்கு சனி மகா பிரதோஷ விழா மிக சிறப்பாக நடந்தது.
இவ்விழாவை முன்னிட்டு சனீஸ்வரன் லிங்கம் நந்திகேஸ்வரர் சிவனுக்கும் பால், தயிர் உட்பட 12 திரவிய பொருட்களால் அபிஷேகம் நடந்தது பின்னர் சுவாமியும் அம்மனும் ரிஷப வாகனத்தில் கோவிலை சுற்றி வலம் வந்தனர். விழாவுக்கு வந்திருந்த பக்தர்கள் அனைவரும் சுவாமியுடன் திருக்கோவிலை வலம்வந்து சிவாய நமக சிவாய நமக என்று சொல்லி வந்தனர்.சிறப்பு அர்ச்சனை பூஜைகள் நடைபெற்றது. தொடர்ந்து தீபாராதனை காட்டப்பட்டு பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை எம் வி எம் குழும சேர்மன், பிஜேபி விவசாய அணி மாநிலத் துணைத் தலைவர், மணிமுத்தையா, கலைவாணி பள்ளி நிர்வாகி வள்ளிமயில், எம் வி எம் கலைவாணி பள்ளி தாளாளர், சோழவந்தான் நகர அரிமா சங்க தலைவர், பேரூராட்சி கவுன்சிலர் மருதுபாண்டியன் ஏற்பாடுகளை செய்து இருந்தனர். ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். இதே போல திருவேடகம் ஏடகநாதர் சுவாமி கோவிலிலும், விக்கிரமங்கலம் கோவில்பட்டி மருததோதைய ஈஸ்வரர் ஆலயத்திலும், மன்னாடிமங்கலம் மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலயத்தில், தென்கரை அகிலாண்டேஸ்வரி சமேத மூலநாத சுவாமி கோவிலிலும், பேட்டை அருணாசல ஈஸ்வரர் ஆலயத்திலும், திருவாலவாயநல்லூர் மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலயத்தில் சனி பிரதோஷ விழா நடந்தது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.