

டைரக்டர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் கீர்த்தி சுரேஷ், செல்வராகவன் நடித்துள்ள படம் சாணி காயிதம். இந்த படம் நேரடியாக ஓடிடியில் மே 6 ம் தேதி அமேசான் பிரைமில் ரிலீஸ் செய்யப்பட உள்ளது. கிரைம் திரில்லர் கதையாக 1980-களில் நடந்த ஒரு உண்மை சம்பவத்தின் அடிப்படையில் இந்த படத்தை எடுத்துள்ளனர். இந்த படத்திற்கு யுவன்சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்
தற்போது வெளியாகியுள்ள இப்படத்தின் ட்ரைலரில், கீர்த்தி சுரேஷ், பொன்னி என்ற கேரக்டரில் நடித்துள்ளார். தனது வாழ்க்கையை துயரமானதாக மாற்றிய ஒருவரை பழிவாங்க துடிக்கும் கேரக்டர். அவரது அண்ணன் சங்கைய்யாவாக செல்வராகவன் நடித்துள்ளார். இவர்கள் இருவரும் இணைந்து ஒருவரை பழிவாங்க போட்ட திட்டத்தை எப்படி நிறைவேற்றுகிறார்கள் என்பது படத்தின் கதை.
கீர்த்தி சுரேஷ், செல்வராகவன் இருவருமே போட்டி போட்டு மிக அற்புதமாக நடித்துள்ளனர். இந்த டிரைலரின் லிங்கை டைரக்டர் அருண் மாதேஸ்வரன் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்திருந்தார். இந்நிலையில் இதை ரீட்வீட் செய்து, டிரைலரை பார்த்த டைரக்டர் து.பா.சரவணன், யபா…என்ன சார் இப்படி பண்ணி வச்சிருக்கிங்க என கேட்டுள்ளார். ட்விட்டரில் சரவணன் கேட்ட இந்த கேள்விக்கு லைக்குகள் குவிந்து வருகிறது. சரவணன், சமீபத்தில் விஷால் நடித்து வெளியான வீரமே வாகை சூடும் படத்தை இயக்கி, டைரக்டராக அறிமுகமானவர். முதல் படத்திலேயே பலரின் பாராட்டையும் பெற்று விட்டார். இந்த படம் தமிழை விட தெலுங்கில் செம ஹிட் ஆனது.


