• Tue. Apr 16th, 2024

திருவனந்தபுரம் நவராத்திரி விழாவை முன்னிட்டு -நாளை பத்மநாபபுரம் அரண்மனையில் இருந்து சாமி சிலைகள் புறப்பாடு!..

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் நடைபெற உள்ள நவராத்திரி விழாவில் மன்னர்கள் கால பாரம்பரிய முறைப்படி பங்கேற்பதற்காக நாளை கன்னியாகுமரி மாவட்டம் பத்மநாபபுரம் அரண்மனையில் இருந்து சாமி சிலைகள் புறப்பட உள்ளது இதற்காக இன்று சுசீந்திரம் முன்னுதித்த நங்கை அம்மன் கோவிலில் இருந்து அம்மன் விக்ரகம் போலீஸ் துப்பாக்கியேந்திய மரியாதையுடன் ஊர்வலமாக புறப்பட்டது.


திருவனந்தபுரத்தில் நவராத்திரி வரும் 7 ஆம் தேதி தொடங்குகிறது. இந்த விழாவில் பங்கேற்பதற்காக கன்னியாகுமரி மாவட்டத்திலிருந்து சுசீந்திம் முன்னுதித்த நங்கை அம்மன், வேளிமலை முருகன் மற்றும் பத்மநாபபுரம் அரண்மனையில் உள்ள தேவாரக்கட்டு சரஸ்வதி அம்மன் ஆகிய சாமி சிலைகள் மன்னரின் உடைவாளுடன் ஊர்வலமாக புறப்பட்டு திருவனந்தபுரம் செல்வது வழக்கம். அங்கு நடைபெறும் நவராத்திரி விழாவில் சாமி சிலைகளை வைத்து பூஜைகள் செய்வர். விழா முடிந்ததும் மீண்டும் சாமி சிலைகள் குமரி மாவட்டத்திற்கு கொண்டு வரப்படும். ஆனால் இந்த ஆண்டு கொரோனா காரணமாக பிரமாண்டமான ஊர்வலம் ரத்து செய்யப்பட்டு சமூக இடைவெளியுடன் எளிதான முறையில் சாமிசிலைகள் வாகனங்களில் கொண்டு செல்லப்படும் என்றும் கேரள அரசு உத்தரவு பிறப்பித்தது.


அதன்படி சுசீந்திரம் முன்னுதித்த நங்கை அம்மன் புறப்படும் நிகழ்ச்சி இன்று நடந்தது. முன்னுதித்த நங்கை அம்மன் கோவிலில் இருந்து பல்லக்கு வாகனத்தில் எழுந்தருளும் நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது தமிழக போலீசாரின் துப்பாக்கி அணிவகுப்பு மரியாதையும் நடைபெற்றது. அதன்பின்னர் சுசீந்திரம் தாணுமாலயசாமி கோவில் முன்பு முன்னுதித்த நங்கை அம்மனுக்கு கோவில் சார்பாக திருக்கண் சாத்தி வழிபாடு நடந்தது. தொடர்ந்து ரதவீதிகளில் அம்மன் வீதி உலா வந்தது. அம்மன் ஆஸ்ராமம், கோட்டார், பார்வதிபுரம், சுங்கான்கடை, வில்லுக்குறி வழியாக பத்பநாபபுரம் அரண்மனை சென்றடைகிறது. பின்னர், சுசீந்திரம் முன்னுதித்த நங்கை அம்மன், வேளிமலை முருகன் பல்லக்கு வாகனத்திலும், தேவாரக்கட்டு சரஸ்வதி அம்மன் யானை மீதும் நாளை பத்மநாபபுரம் அரண்மனையில் இருந்து திருவனந்தபுரத்துக்கு ஊர்வலமாக எடுத்துச் செல்லப்படுகிறது. இந்த நிகழ்ச்சியில் 100 க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். வழக்மாக கேரளா மாநில போலீசார் வருகை தந்து மரியாதை செலுத்தி சுவாமி சிலைகளை ஊர்வலமாக அழைத்து செல்வது ஐதீகம். ஆனால் இந்த முறை கொரோனா நெறிமுறைகள் காரணமாக கேரளா போலீசார் வரவில்லை அவர்கள் தமிழக – கேரளா எல்கையான களியக்காவிளையில் வந்து வரவேற்று செல்ல இருபதாக கூறபடுகிறது.

1. குமரி மாவட்டம் சுசீந்திரம் தாணுமாலயசாமி கோவில் முன்பு முன்னுதித்த நங்கை அம்மனுக்கு கோவில்.

  1. தமிழக போலீசாரின் துப்பாக்கி அணிவகுப்பு மரியாதையுடன் முன்னுதித்த நங்கை அம்மன் பல்லாக்கில் புறப்படுதல்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *