ஸ்வீட்கார்ன் பக்கோடா:
தேவையான பொருட்கள்:
ஸ்வீட் கார்ன் – அரை கப் (வேகவைத்து, மசித்தது), ஸ்வீட் கார்ன் – அரை கப் (வேகவைத்தது), மைதா மாவு – இரண்டு டேபிள் ஸ்பூன், அரிசி மாவு – இரண்டு டேபிள் ஸ்பூன், கடலை மாவு – இரண்டு டேபிள் ஸ்பூன், ரவை – இரண்டு டேபிள் ஸ்பூன், சோள மாவு – ஒரு டேபிள் ஸ்பூன், சோடா மாவு – ஒரு சிட்டிகை, மிளகாய் தூள் – ஒரு டீஸ்பூன், உப்பு – தேவைகேற்ப, கொத்தமல்லி – சிறிதளவு, எண்ணெய் – தேவையான அளவு, சாட் மசாலா – தேவைகேற்ப
செய்முறை:
ஒரு கிண்ணத்தில் வேகவைத்து, மசித்த ஸ்வீட் கார்ன், மைதா மாவு, அரிசி மாவு, கடலை மாவு, சோள மாவு, ரவை, சோடா மாவு, மிளகாய் தூள், உப்பு, கொத்தமல்லி ஆகியவற்றை சேர்த்து நன்றாக பிசைந்து கொள்ளவும். பிறகு, வேகவைத்த ஸ்வீட் கார்ன் சேர்த்து கலந்து கொள்ளவும். பின், கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பக்கோடா போல் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்கவும். இறுதியில் சாட் மசாலா தூவி பரிமாறவும்.
சமையல் குறிப்புகள்:
